top of page

சுயத்தில் வேரூண்றுதல்

22.5.2015

கேள்வி: ஐயா 'சுயத்தில் வேரூண்றுதல்' என்றால் என்ன? அதை எவ்வாறு அடைவது?


பதில்: 'சுயத்தில் வேரூண்றுதல்' என்பது உங்கள் சொந்த வீட்டில் வசிப்பது போன்றது. உங்களை காலி செய்ய முடியாது. மற்றவரில் வேரூன்றி இருப்பது வாடகை வீட்டில் வசிப்பது போன்றது. உங்களை காலி செய்ய முடியும். சுயத்தில் வேரூண்றுதல் என்பது உங்களிலேயே குடியேறுவது அல்லது நிலைபெறுவது.


நீங்கள் எதை அனுபவித்தாலும் அது இரண்டு பிரிவுகளின் கீழ் வருகிறது. அதாவது, வலி மற்றும் மகிழ்ச்சி. இந்த இரண்டையும் தாண்டிய நிலை அமைதி. இதை வேறுவிதமாக சொல்ல வேண்டுமென்றால், வலி ​​மற்றும் மகிழ்ச்சியின் சம நிலைதான் அமைதி. விழிப்புணர்வு மூலம் அமைதியை அடைய முடியும்.


பொதுவாக நீங்கள் வலி அல்லது மகிழ்ச்சியில் தொலைந்து போகிறீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் வலியையும் மகிழ்ச்சியையும் கவனித்தால், ஒரு கட்டத்தில் நீங்கள் வலியிலும் மகிழ்ச்சியிலும் தொலைந்து போகவில்லை என்பதை உணருவீர்கள். அவற்றிலிருந்து நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்.


இதை நீங்கள் அடையாளம் காணும்போது,உங்களில் வேரூன்ற ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதை விட்டுவிடாதீர்கள். அதை உறுதியாகப் பிடித்து ஆழமாகச் செல்லுங்கள். வலியிலும் மகிழ்ச்சியிலும் நீங்கள் இல்லை, விழிப்புணர்வுதான் நீங்கள் என்பதை உணருவீர்கள்.


எல்லாம் கடந்து செல்வதை நீங்கள் உணருவீர்கள். நீங்கள் எதனோடும் ஒட்டிக்கொள்ளவில்லை. நீங்கள் சாட்சியாக இருக்கிறீர்கள். சாட்சி நிலையில் உங்கள் மனம் முற்றிலும் அமைதியாக இருக்கிறது. ஏனெனில் விழிப்புணர்வுதான் அமைதி. இதை நீங்கள் உணரும்போது, உங்கள் மூலத்தை அடைந்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


காலை வணக்கம்.... அமைதியாக இருங்கள்..💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்

98 views0 comments

Recent Posts

See All

உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்

கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந

சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்

bottom of page