25-7-2015
கேள்வி: ஐயா, உறவின் பொருள் என்ன?
பதில்: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல நபர்களுடனும் பல விஷயங்களுடனும் உங்களை தொடர்புபடுத்துகிறீர்கள். நீங்கள் அவர்களுடன் எந்த நோக்கத்திற்காக தொடர்பு கொள்கிறீர்கள் என்பதற்கு ஏற்ப பெயரைக் கொடுப்பதன் மூலம் அந்த உறவை வேறுபடுத்துகிறீர்கள். இதுதான் உறவு என்று அழைக்கப்படுகிறது.
உறவுகள் மற்றவர்களுடனாண உங்கள் நடத்தையை ஒழுங்குபடுத்துகின்றன. உறவுகள் பொறுப்பை ஏற்க உங்களை வலியுறுத்துகின்றன. குழப்பம் மற்றும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான சமூகத்தின் ஏற்பாடுதான் உறவு. உறவுகள் உங்கள் தொடர்பைக் கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் எதனுடனும் உங்களை தொடர்புபடுத்தாத போது, நீங்கள் எல்லாவற்றோடும் தொடர்பில் இருக்கிறீர்கள். அதற்கான ஒரு பயிற்சிதான் தியானம்.
காலை வணக்கம்.... எல்லாவற்றோடும் தொடர்பில் இருங்கள்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Opmerkingen