top of page
Writer's pictureVenkatesan R

கவனம்

29.6.2015

கேள்வி: ஐயா நான் என்ன செய்கிரோனோ அதில் அதிக கவனம் செலுத்தமுடியவில்லை. ஆனால் எப்போதும் மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறேன். இதை எவ்வாறு சமாளிப்பது?


பதில்: அதுதான் புற நிலையில் உள்ள மனதின் இயல்பு. ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.


1. சலிப்பு

2. கவலை


நீங்கள் முதல்முறையாக எந்த செயலையும் செய்யும்போது, ​​உங்கள் புறமனம் அதில் ஈடுபடுகிறது. நீங்கள் அதை நனவுடன் செய்கிறீர்கள். அதே செயலை நீங்கள் மீண்டும் மீண்டும் அதே வழியில் செய்யும்போது, ​​அது உங்கள் பழக்கமாக மாறும். இப்போது உங்கள் நடுமனம் அதைச் செய்ய பொறுப்பேற்கும்.


நடுமனம் ஒரு இயந்திரம் போல் செயல்படுகிறது. நடு மனதிற்கு பொறுப்பை கொடுத்துவிட்டு உங்கள் புறமனம் அலைந்து திரிகிறது. எனவே நீங்கள் விரைவில் சலிப்படைவீர்கள். இதைக் கடக்க, ஒரு வேலையை வெவ்வேறு விதங்களில் செய்யுங்கள். ஒரே மாதிரியான உணவாக இருந்தாலும் அதை வித்தியாசமாக தயார் செய்யுங்கள்.


நடுமனதிற்கு புதிய விஷயங்களைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே அது புதிய செயல்களில் தலையிடாது. பின்னர் புறமானம்தான் ஈடுபட வேண்டும். புற மனம் ஈடுபடும்போது, உங்களுக்கு அந்த செயலில் கவனம் இருக்கும். வித்தியாசமாக சிந்தித்து வித்தியாசமாக செய்யுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு விழிப்புணர்வு இருக்கும்.


பழக்கத்தினால் உங்கள் மனம் மீண்டும் அலையத் தொடங்கும். சிறிது நேரம் கழித்து நீங்கள் விழிப்புணர்வை இழந்துவிட்டீர்கள் என்பதை உணர்வீர்கள். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்களோ அதன் மீது மீண்டும் உங்கள் கவனத்தைக் கொண்டு வாருங்கள். மீண்டும் நீங்கள் விழிப்புணர்வை இழப்பீர்கள். பரவாயில்லை. மீண்டும் உங்கள் கவனத்தை உங்கள் செயலுக்குக் கொண்டு வாருங்கள்.


ஆரம்பத்தில் நினைவு ஒரு நாளில் மூன்று முறை அல்லது ஐந்து முறை இருக்கும். சில நேரங்களில் உங்களுக்கு நினைவே வராது. உங்களுக்கு நினைவு வரும்போது, ​​நீங்கள் விழிப்புணர்வை இழந்ததற்காக குற்ற உணர்வு அடைய வேண்டாம். மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டதற்காக பெருமிதம் கொள்ளுங்கள். நாளுக்கு நாள் நினைவை அதிகரிக்க வேண்டும்.


இயந்திர மனதிற்கு எதையும் விட்டுவிடாதீர்கள். எல்லாவற்றையும் விழிப்புணர்வுடன் செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் தினமும் முயற்சி செய்தால், அதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக விழிப்புணர்வுடன் இருக்கிறீர்களோ, அவ்வளவு ஆழமாக உங்கள் மனதிற்குள் செல்வீர்கள். உங்கள் மனதின் ஆழமான நிலையில், அலைந்து திரிவது இருக்காது. நிலைத்தன்மை இருக்கும்.


காலை வணக்கம்... எல்லாவற்றையும் விழிப்புணர்வுடன் செய்யுங்கள்...💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்

207 views0 comments

Recent Posts

See All

உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும்...

கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப்...

சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே...

Comments


bottom of page