23.5.2015
கேள்வி: ஐயா, விழிப்புணர்வு என்றால் என்ன?
பதில்: விழிப்புணர்வு என்பது அறிவின் சாராம்சம், சுயத்தின் சாராம்சம். நீங்கள் என்ன செய்தாலும் அது வெவ்வேறு நிலைகளில் விழிப்புணர்வின் செயல்பாடு தான். அது உடல் வழியாக செயல்படும்போது புலன் உணர்வு என்று அழைக்கப்படுகிறது. அது பகுப்பாய்வு, தீர்ப்பு, முடிவெடுப்பது, விளக்கம், தேர்வு செய்தல், நடவடிக்கை எடுப்பது என செயல்படும்போது, தர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.
அது சுற்றுப்புறங்களுக்கு எதிர்வினை ஆற்றும் போது, உணர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. அது சூழலுக்கு ஏற்ப செயல்படும்போது / பதிலளிக்கும் போது, உணர்வு என்று அழைக்கப்படுகிறது. அது செயல்படாமல் அல்லது எதிர்வினையாற்றாமல் கவனிக்கும்போது, சாட்சி என்று அழைக்கப்படுகிறது. சாட்சி நிற்கும்போது, அது தூய விழிப்புணர்வு. தூய விழிப்புணர்வு என்பது மொத்த விழிப்புணர்வு.
விழிப்புணர்வு வரம்பிலிருந்து வரம்பற்றது வரை விரிவடைகிறது. விழிப்புணர் வரம்பிற்குட்பட்டு இருக்கும்போதும் வரம்பற்று இருக்கும் போதும் அதன் தரம் ஒரே மாதிரியாக இருக்கும். விழிப்புணர்வு என்பது நெருப்பு போன்றது. நெருப்பு அளவில் சிறியதாக இருக்கும்போதும் பெரியதாக இருக்கும்போதும் அதன் தரம் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, விழிப்புணர்வின் அளவை அதிகரிக்க வேண்டும். விழிப்புணர்வை அதிகரிக்க தியானம் உங்களுக்கு உதவுகிறது. மனித பிறப்பின் நோக்கம் தூய விழிப்புணர்வை அடைவதே ஆகும்.
காலை வணக்கம் .... விழிப்புடன் இருங்கள் ...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comentarios