வாழ், நேசி, சேவைசெய் மற்றும் விட்டுச்செல்
5.5.2016 கேள்வி: ஐயா, எப்படி வாழ வேண்டும், எப்படி நேசிக்க வேண்டும், எப்படி சேவை செய்ய வேண்டும், இந்த உலகத்தை விட்டுச் செல்வது எப்படி? பதில்: உங்களுக்காக வாழுங்கள். மற்றவர்களின் கருத்துகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம். மேலும் யாரையும் காயப்படுத்த வேண்டாம். அனைவரையும் எதிர்பார்ப்பின்றி நேசியுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் கடைசி தருணம் என்று எண்ணி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். அன்பு உங்கள் ஆணவத்தை உருக்கட்டும். உங்கள் அன்பு மற்றவர்களின் ஆத்மாக்களில் ஊடுருவட்டும். உதவி தேவைப்படுபவர்கள் உங்களிடம் உதவி கேட்பதற்கு முன் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். புகழுக்காக அல்லாமல், உங்களின் ஒரு பகுதி துன்பப்படுகிறது என்ற உணர்வோடு சேவை செய்யுங்கள். உங்கள் சேவை உங்களிடம் இரக்கத்தை வளர்க்கட்டும். முழுமையான மனநிறைவுடன் உங்கள் உடலை விடுங்கள். நிறைவேறாத ஆசை எதுவும் இருக்கக்கூடாது. உங்கள் உடலை விட்டுவிட்டு எல்லா இடங்களிலும் இருங்கள் காலை வணக்கம் ... வாழ், நேசி, சேவைசெய் மற்றும் விட்டுச்செல்..💐 வெங்கடேஷ் - பெங்களூர் (9342209728)
வெற்றி உண்டாகட்டும்