19.4.2016
கேள்வி: ஐயா .. பல முறை நான் இலக்கை மறந்துவிடுகிறேன் .. நான் தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபடவில்லை. தொடர்ந்து முயச்சித்தால் எனக்கும் சமுதாயத்திற்கும் முக்கியமான பணிகளை என்னால் முடிக்க முடியும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இது எனக்கு போதுமான கவர்ச்சிகரமானதல்ல .. சில நேரங்களில் நான் முயற்சி செய்கிறேன், ஆனால் சில தடங்கல்கள் காரணமாக அதை தாமதப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ நேரிடுகிறது. சில நேரங்களில் நானே பணியை புறக்கணிக்கிறேன் அல்லது ஒத்திவைக்கிறேன். இது எனக்கு அலுத்துவிட்டது. இது குழந்தை பருவத்திலிருந்தே நடப்பதை நான் காண்கிறேன். நான் அதற்க்கு பொறுப்பேற்க விரும்புகிறேன். இந்த பழக்கத்தை நான் மாற்ற விரும்புகிறேன். எப்படி மாற்றுவது?
பதில்: நீங்கள் தொடர்ந்து செய்து முடிக்க இரண்டு பணிகள் உள்ளன. 1. தவிர்க்க முடியாத பணி. 2. கவர்ச்சிகரமான பணி. உயிர்வாழ்வதற்காக செய்யப்படும் பணி தவிர்க்க முடியாதது. நீங்கள் அதில் ஆர்வமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். பலர் பிழைப்புக்காக தங்கள் வேலையைச் செய்கிறார்கள். தவிர்க்க முடியாதது அல்ல, ஆனால், நீங்கள் அதில் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால், அது ஒரு கவர்ச்சிகரமான பணியாகும். நீங்களும் அதைத் தொடருவீர்கள்.
இந்த இரண்டு பணிகளுக்கும் நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள். ஆனால் ஒரு பணி தவிர்க்க முடியாததும் அல்ல, கவர்ச்சியானதும் அல்ல என்றால், அங்குதான் பிரச்சினை ஏற்படுகிறது. உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வது இந்த வகையின் கீழ் வருகிறது. அவை முக்கியமானவை ஆனால் கவர்ச்சிகரமானவையோ அல்லது தவிர்க்க முடியாதவையோ அல்ல. இந்த வகையான பணிகளைத் தொடரவும் முடிக்கவும் நீங்கள் உறுதியையும் அர்ப்பணிப்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் நோன்பு நோற்பதும், சில நாட்கள் மௌனம் கடைப்பிடிப்பதும், 48 நாட்கள் பூஜை / ஜபம் செய்வதும் உங்கள் உறுதியையும் அர்ப்பணிப்பையும் அதிகரிக்கும்.
கடவுளின் பெயரால் நீங்கள் இவற்றைச் செய்யும்போது, உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும், மற்றவர்களும் உங்களை ஆதரிப்பார்கள். அதனால்தான் அவற்றையெல்லாம் கடவுளின் பெயரால் நிகழ்த்தும்படி கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யும்போது, உங்கள் உடலும் மனமும் சுத்திகரிக்கப்பட்டு உங்கள் உறுதியும் அர்ப்பணிப்பும் மேம்படும். நீங்கள் எந்த பணியை மேற்கொண்டாலும், அதிலும் அதே அர்ப்பணிப்பையும் உறுதியையும் காண்பிப்பீர்கள்.
இப்போதெல்லாம் மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. எனவே, அவர்கள் இந்த விஷயங்களைச் செய்வதில்லை. அதே விஷயங்களைச் செய்யத் தேவையில்லை. நீங்கள் தியானம் கற்றுக்கொண்டிருந்தால், 48 நாட்கள் தொடர்ந்து தியானம் செய்யவேண்டும் என்று சங்கல்பம் மேற்கொள்ளுங்கள். எந்த சூழ்நிலையிலும் முயற்சியை கைவிடாமல், தினந்தோறும் 48 நாட்கள் தியானம் செய்து முடிக்க வேண்டும். தியானத்தின் சக்தி, அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு மற்றும் நன்மைகளை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று நீங்கள் உணருவீர்கள். நீங்கள் அதை மற்ற பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.
காலை வணக்கம் .. உறுதியையும் அர்ப்பணிப்பையும் வளர்த்துக் கொள்ளுங்கள் ... 💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments