4.4.2016
கேள்வி: ஐயா, ஆன்மமீகத்தில் இன்னும் சிறப்பாக சாதிப்பதற்கு எனக்குள் இருக்கும் எதை அறிந்து கொள்ள வேண்டும்? அதற்க்கான வழி என்ன?
பதில்: உங்கள் விழிப்புணர்வை பிரபஞ்சம் மற்றும் அதற்கு அப்பால் விரிவுபடுத்தலாம். இதனால் உங்கள் மன அதிர்வெண் எளிதில் குறையும். உங்கள் விழிப்புணர்வை பரமாணு வரை சுருக்கலாம். இதனால் உங்கள் மனம் கூர்மையாகிவிடும். இந்த நுட்பங்களில் நிபுணரான பிறகு, நீங்கள் விரிவு மற்றும் சுருக்கம் இல்லாமல் அசைவற்று இருக்க முடியும். அசைவற்ற நிலைதான் அறிவு (Consciousness). அறிவுதான் நீ . நீங்கள் ஓய்வாக இருக்கும்போதெல்லாம் அறிவை கவனியுங்கள். உங்கள் மனம் அறிவாக மாறும்.
காலை வணக்கம் ... அசைவற்று இருங்கள் ..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
தினம் தினம் இப்படி நுண் மாண் நுழைபுலன் சித்தியானால் அசைவற்றநிலை எய்துதல் எளிது.
நன்று பதிவு.அனைவரும் முயற்சி செய்து பயிற்சி பெற்று இறைநிலையை உணர்ந்து அதுவாகி உலகைசீர்மைபெறச்செய்வோம்.
பஞ்சபுலன் கவர்ச்சியிலே பழகி விட்ட
மனிதன் பரவசமாய் இன்பமுற
இறை நிலை