29.7.2015
கேள்வி: ஐயா, எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. நம்முடைய உணர்வை முழு பிரபஞ்சத்திற்கும் விரிவுபடுத்துவது ஞானம் என்று மக்கள் கூறுகிறார்கள். இது உண்மையா? அது உண்மை என்றால், முழு பிரபஞ்சமும் நம் உடல் என்பது நமது மாயை. நம் உடல் பிரபஞ்சமாக இருந்தால், மக்களுக்கு போதிக்காமல் நாம் ஏன் அதை கட்டளை பிறப்பித்து செய்விக்க முடியாது. நான் என் மனதிற்கு கட்டடளைகளை அனுப்பும்போது தன்னார்வத்துடன் கண்களை மூடிக்கொள்ள முடியும். கண்களை மூடுவதற்கு நான் அதே போல் கட்டளைகளை பிறப்பித்தல், முழு பிரபஞ்சமும் கண்களை மூட வேண்டும். பிரபஞ்சம் (முழு உலகளாவிய மக்களும்) ஏன் கண்களை மூடிக்கொள்ளவில்லை?
பதில்: அன்றொருநாள் நான் அடையாளமாக முழு பிரபஞ்சமும் உங்கள் உடல் என்று சொன்னேன். உங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் ஏதேனும் வலியை நீங்கள் உணர்ந்தால், அதை உடனடியாக அகற்ற முயற்சிப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் முழு உடலையும் ஒன்றாக உணர்கிறீர்கள்.
அதேபோல், ஞானம் அடைந்தவர்கள் முழு பிரபஞ்சமும் ஒன்று என்று உணர்கிறார்கள். இது ஆழமான உணர்வு. எனவே வலி எங்கிருந்தாலும், அதை அகற்ற முயற்சிப்பார்கள். இது ஒரு இயற்கையான செயல்முறை. சில வலிக்கு, வெறும் மருந்து போதும். சில வலிக்கு அறுவை சிகிச்சை தேவை.
அதேபோல், சிலருக்கு வெறும் அறிவுறுத்தல் (ஆசீர்வாதம்) போதும். மாற்றம் நடக்கும். மற்றவர்களுக்கு, கற்பித்தல் அவசியம். எனவே அவர்கள் போதனை செய்கிறார்கள். கண்களை மூடுவதற்கு நீங்கள் அறிவுறுத்தினால், ஒட்டுமொத்த மக்களும் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
உங்கள் சொந்த உடலில், உங்கள் கட்டளைகளுக்கு பதிலளிக்காத பல விஷயங்கள் உள்ளன. கட்டளை கொடுத்து உங்கள் தலைமுடியை நகர்த்த முடியுமா? உங்கள் கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டால், கட்டளையை வழங்குவதன் மூலம் அதை உயர்த்த முடியாது. ஆனால் அவை உங்கள் உடலின் பாகங்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
ஞானம் அடைந்தவர்கள் வலிகளை அகற்ற அறிவுறுத்துகிறார்கள். ஆனால் மக்கள் உணர்வற்றவர்களாகவும், முடங்கிப்போயும் இருக்கிறார்கள். அமைதியான கட்டளைகளை அவர்களால் பெற முடியவில்லை. என்ன செய்ய? அதனால்தான் ஞானிகள் போதிக்கிறார்கள். பொதுவாக, மனித மனம் மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் சக்தியை விரும்புகிறது. அதனால்தான் இந்த வகையான கேள்வி வந்துள்ளது.
ஆனால் அந்த ஆழ்ந்த உணர்வு மனதினுடையது அல்ல. அது அறிவினுடையது. ஞானமடைதல் என்பது கட்டுப்படுத்துவதல்ல. இயற்கையோடு ஒற்றுமையாக வாழ்வதேயாகும். இயற்கையின் ஒழுங்கமைப்பை நீங்கள் தொந்தரவு செய்ய மாட்டீர்கள். அதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது என்று அர்த்தம் அல்ல. ஆனால் நீங்கள் அதை அந்த நிலையில் செய்ய மாட்டீர்கள்.
காலை வணக்கம் ... ஆழ்ந்த உணர்வைக் கொண்டிருங்கள்....💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comentarios