28.6.2015
கேள்வி: மற்றவர்களின் ரகசியத்தை நாம் ஏன் அறியக்கூடாது?
பதில்: பிறரிடமிருந்து மறைக்கப்படுவது இரகசியமாகும். பிறர்மீது நம்பிக்கை இல்லாதபோது நீங்கள் ரகசியத்தை காக்கிறீர்கள்.
மூன்று விஷயங்கள் ரகசியமாக வைக்கப்படுகிறது.
1. குற்றம்
2. சொத்து
3. அறிவு.
ரகசியம் காக்க மூன்று காரணங்கள் உள்ளன. நீங்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினால்,
1. சமூகம் உங்களைத் தண்டிக்கும்.
2. மற்றவர்கள் உங்கள் சொத்தை அபகரிப்பார்கள்.
3. நீங்கள் மற்றவர்களுக்கு முக்கியமாக இருக்க மாட்டீர்கள்.
மற்றவர்களின் ரகசியத்தை நீங்கள் ஏன் அறியக்கூடாது என்பதற்கான ஏழு காரணங்கள். மற்றவர்களின் ரகசியம் உங்களுக்குத் தெரிந்தால்,
1.நீங்கள் மற்றவர்களால் கொல்லப்படலாம். ஏனென்றால் நீங்கள் அவர்களை அச்சுறுத்துவீர்கள்.
2. மற்றவர்களைக் கொன்று அவர்களின் சொத்துக்களைப் பறிக்க நீங்கள் ஆசைப்படலாம்.
3. நீங்கள் அவர்களின் ரகசியத்தை வெளியிடுவீர்கள் என்று கூறி மற்றவர்களை அச்சுறுத்தலாம்.
4. மற்றவர்கள் தவறுகளை நீங்கள் அறிந்ததால் அவர்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படலாம்.
5. மற்றவர்கள் வெளிப்படையாக குற்றம் செய்யலாம். ஏனெனில் அவர்கள் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டனர்.
6. மற்றவர்கள் உங்களை பழிவாங்க காத்திருப்பார்கள். நீங்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும், அவர்கள் அதை பெரிதுபடுத்தி உங்கள் பெயரைக் கெடுப்பார்கள்.
7. நீங்கள் உங்களை உயர்ந்தவராக எண்ணி மற்றவர்களை அவமதிக்கலாம்.
மற்றவர்களின் ரகசியங்களை அறிந்துகொள்வது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவாது. அதற்கு பதிலாக, உங்களுக்குள் இருக்கும் ரகசியங்களை அறிய முயற்சி செய்யுங்கள். அது உங்களை முழுமையை நோக்கி அழைத்துச் செல்லும்.
காலை வணக்கம் .... உங்களுக்குள் இருக்கும் ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள் ...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments