17.4.2016
கேள்வி: ஐயா இப்போதெல்லாம் மரணத்தைப் பார்த்தாலும் கேட்டாலும் எனக்கு பயம் ஏற்ப்படுகிறது. மரணம் விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அது என்னை அறிந்து கொள்ளும் பணியை நான் முடிக்கவில்லை என்பதை நினைவூட்டுகிறது. சரியாக இந்த பணி தான் எனக்கு நினைவூட்டப்படுகிறது .. தயவுசெய்து இதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?
பதில்: நீங்கள் சரியான பாதையில் இருப்பதை இது காட்டுகிறது. நீங்கள் மரணத்தை எதுவும் செய்ய முடியாது. ஆனால் உங்கள் பிறப்பின் நோக்கத்தை நீங்கள் முடிக்க வேண்டும். மற்றவர்களின் மரணம் உங்கள் பிறப்பின் நோக்கத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறது என்றால், வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம். மற்றவரின் மரணம் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டும். எந்த நேரத்திலும் மரணம் வரக்கூடும். நீங்களும் ஒரு நாள் நிச்சயம் இறந்துவிடுவீர்கள். இதை நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் நேரத்தை வீணாக்க மாட்டீர்கள்.
நீங்கள் தியானிக்கும் போதெல்லாம், இது உங்கள் வாழ்க்கையின் கடைசி தருணம் போல உணர்ந்து மிகுந்த அவசரத்துடன் தியானியுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் உங்களை மிக விரைவில் உணர முடியும். வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை உணர்ந்து இந்த தருணத்தை முழுமையாக வாழுங்கள். உங்களை முழுவதுமாக வெளிப்படுத்துங்கள். உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அனைவர் மீதும் அக்கறை செலுத்துங்கள்.
காலை வணக்கம்.. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நிறைவாக கழியட்டும்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments