2.7.2015
கேள்வி: ஐயா, மனம் உடலற்ற ஆத்மாவில் செயல்படுமா?
பதில்: உடல் என்பது வன்பொருள் போன்றது. மனம் என்பது மென்பொருள் போன்றது. வன்பொருள் இல்லாமல் மென்பொருள் வேலை செய்ய முடியாது. மென்பொருள் இல்லாமல் வன்பொருளால் பயனில்லை.
மனித மனம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது.
1. புற மனம் (conscious mind)
2. நடு மனம் (subconscious mind)
3. அடி மனம் (super conscious mind)
இந்த மூன்றில், அடி மனம் தான் கர்ம பதிவுகளை சுமந்திருக்கும் ஆத்மா ஆகும்.
மரணம் நிகழும்போது, புற மனமும் நடு மனமும் செயல்படுவதை நிறுத்திவிடுகிறது. கர்ம பதிவுகளுடன் ஆத்மா உடலுக்கு வெளியே செல்கிறது. கர்ம பதிவுகள் விதைகளைப் போன்றவை. விதைகள் மரங்களாக மாற, மண் தேவை. அதேபோல், கர்ம பதிவுகள் வெளிப்படுவதற்கு, உடல் தேவைப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் நடு மனதையும் அடி மனதையும் அறிந்திருக்க மாட்டார்கள். மனதின் இந்த இரண்டு நிலைகளும் அவர்களில் விழிப்புணர்வற்ற மனங்களாக செயல்படுகின்றன. அவர்கள் உடலை விட்டு வெளியேறும்போது, அவர்களின் ஆத்மாக்கள் தூங்குவது போல அறியாமையில் மிதந்து கொண்டிக்கும். அவர்களின் ஆத்மாக்கள் மற்றவர்களின் உடல்களில் விழிப்புணர்வு இல்லாமல் இணையும்.
நீங்கள் உடலில் இருக்கும்போது அடிமன நிலையை அடைந்திருந்தால், உடலை விட்டு வெளியேறிய பிறகு உங்கள் ஆன்மா விழிப்புடன் இருக்கும். அதன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள அது பொருத்தமான உடலை விழிப்புணர்வோடு தேர்ந்தெடுக்கும். சாதாரண சிற்றின்பத்திலிருந்து ஞானம் அடைதல் வரை நீங்கள் எதை அடைய விரும்பினாலும், உங்களுக்கு உடல் தேவை. உடல் இல்லாமல் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. எனவே உடல் மிகவும் விலைமதிப்பற்றது.
காலை வணக்கம்... உங்கள் விலைமதிப்பற்ற உடலைப் பாதுகாத்து வளர்த்துக் கொள்ளுங்கள்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments