11.7.2015
கேள்வி: ஐயா, மனதில் மதிப்பீடு செய்யாத நிலையை எவ்வாறு அடைவது?
பதில்: பொதுவாக, மனம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. புற மனம் (Conscious mind)
2. நடு மனம் (Subconscious mind)
3. அடி மனம் (Super conscious mind)
உங்கள் அடி மனம் ஒரு விஷயத்தைச் சொல்லும், நடு மனம் இன்னொரு விஷயம் சொல்லும், புற மனம் வேறு ஏதாவது செய்யும். பிரிவு காரணமாக, அவை வித்தியாசமாக செயல்படுகின்றன. மதிப்பீடு காரணமாக பிரிவு நடந்துள்ளது.
மதிப்பீடு செய்யாமல் நீங்கள் எதையும் கவனித்தால், அந்த பிளவுகள் மறைந்துவிடும். மனம் ஒன்றாகிறது. அந்த நிலை முழு விழிப்புணர்வு என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் உள்ளே கவனித்தாலும் சரி அல்லது வெளியே கவனித்தாலும் சரி. உதாரணமாக, நீங்கள் ஒரு பூவைப் பார்க்கும்போது, உங்கள் மனம் உங்கள் கடந்த கால அனுபவத்துடன் பூவை ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும்.
ஆனால் பூவைப் பற்றி எதுவும் யோசிக்காமல் பூவைப் பார்த்தால், பூவின் பெயர் கூட யோசிக்காமல், உங்கள் மனம் ஒன்றாகிறது. மனம் ஒன்றானதும், உங்களுக்கும் பூவிற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. இருவரும் ஒன்றாகிவிடுகிறீர்கள். உள் ஒற்றுமை வெளி ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது.
காலை வணக்கம் .... பேதமற்ற நிலையை உணருங்கள்....💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments