15.5.2015
கேள்வி: பிறந்த நாள், ஆண்டுவிழா போன்றவற்றை நாம் ஏன் கொண்டாடுகிறோம் ...? 🎉 🎂
பதில்: நம் வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் என்பதை நினைவில் கொள்ளவும்...
நம்முடைய சந்தோஷத்தையும், அறிவையும், செல்வத்தையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் தினமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும் ...
தொடர்புக் கொள்வதுதான் வாழ்க்கை என்பதை நினைவில் கொள்ளவும்...
நாம் அதிகமானவர்களுடன் நம்மை தொடர்புபடுத்தி அன்றாடம் நம் உறவை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்...
ஒவ்வொரு கணத்திற்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்...
நாம் நம்முடைய பிறந்தநாளையும் ஆண்டுவிழாவையும் கொண்டாடுகிறோம்.
ஒவ்வொரு கணத்திற்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது, கொண்டாட்டத்தை அடுத்த 365 நாட்களுக்கு ஒத்திவைக்காமல் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுகிறோம் ...
ஒவ்வொரு கணத்தையும் நாம் கொண்டாடினால், மரணத்தையும் நம்மால் கொண்டாட முடியும் ....😊
காலை வணக்கம் ... இந்த தருணம் ஆனந்தமாக இருக்கட்டும் ...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments