16.5.2015
கேள்வி: பிரபஞ்சம் ஏன் இருக்கிறது?
பதில்: முழு பிரபஞ்சமும் ஆற்றலைத் தவிர வேறில்லை .. ஆற்றல் என்றால் என்ன? செயல்படுவதுதான் ஆற்றல். ஆற்றல் ஏன் செயல்படுகிறது? பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒழுங்காக செயல்படுவதால், எல்லாவற்றிலும் அறிவு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் ஒழுங்காக செயல்படுத்துவது தான் அறிவு. ஆற்றல் இருக்கும் இடத்தில், அறிவும் இருக்கிறது. எனவே ஆற்றல் மற்றும் அறிவு இரண்டு பிரிக்க முடியாத அம்சங்கள். பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை என்றால், எஞ்சியிருப்பது சுத்தவெளி. எனவே முழு பிரபஞ்சமும் சுத்தவெளியின் மாற்றமாகதான் இருக்க வேண்டும்.
சுத்தவெளியில் ஆற்றலும் அறிவும் ஒன்றாகும். சுத்தவெளி மொத்த அறிவாற்றலாக இருப்பதால், அது பிரபஞ்சமாக மாற முடிவு செய்திருக்க வேண்டும். எனவே பிரபஞ்சத்தின் இருப்பு தற்செயலானதாகவோ அல்லது இயந்திரமயமாகவோ இருக்க முடியாது. தன்மாற்றத்திற்க்கான அவசியம் என்ன? அது ஏற்கனவே மொத்தமாக இருந்ததால், அதற்க்கு எந்த தேவையும் இல்லை. எனவே எந்த நோக்கமும் இல்லை. எந்த அவசியமும் நோக்கமும் இல்லாததால், அது வேடிக்கைக்காக மட்டுமே தன்மாற்றம் அடைந்திருக்க வேண்டும். அதனால்தான் இது தெய்வீக நாடகம் என்று அழைக்கப்படுகிறது.
காலை வணக்கம் ... தெய்வீக விளையாட்டில் பங்கேற்பவராக இருங்கள்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments