top of page
Writer's pictureVenkatesan R

பாத்திரத்தை உருவாக்குபவர்

18.5.2015

கேள்வி: உங்கள் பாத்திரத்தை உருவாக்குவது யார்?


பதில்: தெய்வீக நாடகத்தில், ஒவ்வொருவரும் தங்களது பாத்திரத்தை தாங்களே உருவாக்க வேண்டும். அதுதான் தெய்வீக நாடகத்தின் அழகு. உங்கள் பாத்திரத்தை உருவாக்க உங்களுக்கு சுதந்திரம் இருப்பதால், நீங்கள் ஒரு முன்மாதிரியைத் தேடுகிறீர்கள். அநேகமாக உங்கள் முன்மாதிரி ஒரு பிரபலமாகவோ அல்லது புகழ்பெற்ற நபராகவோ இருப்பார். நீங்கள் அவர்களின் அந்தஸ்தை விரும்புகிறீர்கள். உண்மையில், அவர்களின் சொந்தக் குழந்தைகளாலும் அதே நிலையை அடைய முடியாது. பிரபலத்திற்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், அவர் கடைசியாக செய்ததைப் போலவே இப்பொழுது அவரால் நிகழ்த்த முடியாது. ஏனெனில் வரலாறு ஒருபோதும் மறுமுறை நிகழ்த்தப்படுவதில்லை.


ஒவ்வொரு கணமும் நிலைமை மாறும்போது, ​​சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் பாத்திரத்தை மாற்ற வேண்டும். நீங்கள் ஒருவரைப் பின்பற்றினால், சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் பாத்திரத்தை மாற்ற முடியாது. அது தான் பிரச்சனையே.


வாழ்க்கை ஒரு பயணம். வழியை அறிந்து கொண்டு சொந்தமாக பயணம் செய்யுங்கள்.


போக்குவரத்து விதியை நீங்கள் அறிந்திருப்பதால், உங்கள் பயணத்தின் போது அதைப் பயன்படுத்துவதைப் போல, உங்கள் வாழ்க்கைப் பயணத்திற்கான வழிகாட்டுதல்களைப் மற்றவரிடமிருந்து பெறுவீர்கள். வழியைப் பின்பற்றுங்கள், வழிகாட்டுபவரை அல்ல. சில நேரங்களில் வழிகாட்டுதல்கள் உங்கள் வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் விழிப்புடன் இருந்து உங்கள் பாத்திரத்தை மாற்ற வேண்டும்.


காலை வணக்கம் ... உங்கள் பயணம் ஆனந்தமாக அமையட்டும்...💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்

98 views0 comments

Recent Posts

See All

உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும்...

கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப்...

சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே...

Comments


bottom of page