top of page
Writer's pictureVenkatesan R

புகைபிடிக்கும் பழக்கம்

27.6.2015

கேள்வி: ஐயா நான் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட விரும்புகிறேன். விழிப்புணர்வுடன் புகைபிடிக்க முயற்சித்தேன். ஆனால் புகைபிடிக்கும் போது என்னால் விழிப்புடன் இருக்க முடியவில்லை. தயவுசெய்து எனக்கு வழிகாட்டவும்.


பதில்: நீங்கள் முதல் முறையாக எந்த செயலையும் செய்யும்போது, ​​அது உங்கள் விருப்பச் செயலக இருக்கும். ஒரே செயலை நீங்கள் பலமுறை செய்யும்போது, அது உங்கள் பழக்கமாகிவிடும். பின்னர் அது தன்னிச்சையான செயலாக மாறுகிறது. அதாவது அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. நீங்கள் அதற்கு அடிமையாகிவிட்டீர்கள்.


அந்நிலையில் நீங்கள் புகைபிடிக்க விரும்பவில்லை என்றாலும், ஒரு தூண்டுதல் உங்களை புகைபிடிக்க தூண்டுகிறது. இப்போது தூண்டுதல் மிகவும் சக்திவாய்ந்ததாகிவிட்டது. அது 70 கி.கி. எடையுள்ள உங்கள் உடலை நடத்துகிறது. உங்கள் உடலும் மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. நீங்கள் தூண்டுதலுக்கு அடிமைகளாகி விட்டீர்கள். தூண்டுதல்தான் இப்போது முதலாளி.


நீங்கள் முதலாளியுடன் சண்டையிட முடியாது. ஆனால் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். நீங்கள் மின் விசிறியை நிறுத்த விரும்பினால், விசிறியுடன் சண்டையிடுவதற்கு பதிலாக சீராக்கியை (Regulator ) கையாள வேண்டும். இங்கே தூண்டுதல் சீராக்கி ஆகும். நீங்கள் அதை கையாள வேண்டும். இனிமேல் தூண்டுதல் வரும்போது, தூண்டுதலை ​ஒரு நிமிடம் காத்திருக்கச் சொல்லுங்கள்.


சரியாக ஒரு நிமிடம் போதும். ஆர்வக் கோளாறு காரணமாக ஒரு நிமிடத்திற்கு மேல் கால அளவை அதிகரிக்க வேண்டாம். நீங்கள் ஒரு நிமிடத்திற்கு மேல் கால அளவை அதிகரித்தால், தோல்வியடைவீர்கள். தூண்டுதலை ஒரு நிமிடம் நிறுத்தி வைக்க முடிந்தால், அந்த ஒரு நிமிடம் அது உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு நிமிடம் தூண்டுதல் மீது நீங்கள் விழிப்போடு இருப்பீர்கள். அதேபோல் புகைப்பிடிப்பதன் மீதும் ஒரு நிமிடம் உங்களால் விழிப்போடு இருக்க முடியும்.


அதே முறையில், இரண்டாவது நாளில் இரண்டு நிமிடங்கள், மூன்றாம் நாளில் மூன்று நிமிடங்கள் என்று அதிகரிக்கவும். காலம் அதிகரிக்கும்போது, ​​படிப்படியாக நீங்கள் தூண்டுதலுக்கு முதலாளியாகிவிடுவீர்கள். தூண்டுதல் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்தால்தான், புகைப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். அதற்கு முன் விடுபட முடியாது. இந்த நுட்பத்தை முயற்சி செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.


காலை வணக்கம் ... தூண்டுதல் மீது விழிப்போடு இருங்கள்..💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்

104 views0 comments

Recent Posts

See All

உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும்...

கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப்...

சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே...

Comments


bottom of page