22.6.2015
கேள்வி: ஐயா, பயத்திற்கும் பதட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
பதில்: பயம் என்பது அச்சுறுத்தலால் தூண்டப்பட்டு உயிரினங்களால் உணரப்படும் ஒரு உணர்ச்சியாகும், இது மூளை மற்றும் உறுப்பு செயல்பாட்டில் மாற்றத்தையும் இறுதியில் நடத்தையில் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இது எதிர்க்கும் அல்லது தப்பும் பதில்வினைக்கு வழிவகுக்கிறது.
பதட்டம் என்பது உள் கொந்தளிப்பின் விரும்பத்தகாத நிலையால் ஏற்படும் ஒரு உணர்ச்சியாகும், இது பெரும்பாலும் முன்னும் பின்னுமாக இயங்குதல், உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் அசை போடுதல் போன்ற பதட்ட நடத்தைகளுடன் இருக்கும்.
பயம் என்பது ஒரு உண்மையான அல்லது உணரப்பட்ட உடனடி அச்சுறுத்தலுக்கான பிரதிபலிப்பாகும். அதேசமயம் பதட்டம் என்பது எதிர்கால அச்சுறுத்தலின் எதிர்பார்ப்பாகும். அச்சத்திற்கு காரணம் பற்று. நீங்கள் எதனுடனாவது பற்று வைத்திருந்தால், அதை இழந்துவிடுவார்கள் என்று எண்ணி பயப்படுவீர்கள்.
உடல் பற்று என்பது உடலை இழக்க / சிதைக்க அச்சுறுத்தல் வரும்போது மரண பயம் மற்றும் வயதாகிவிடுமோ என்ற பயத்திற்கு வழிவகுக்கிறது. பொருள் பற்று அதை இழக்க நேரிடும் போது திருட்டு பயத்திற்கு வழிவகுக்கிறது. தேர்வு முடிவின் மேல் உள்ள பற்று தேர்வு பயத்திற்கு வழிவகுக்கிறது.
நீங்கள் ஒருவர் மீது பற்று கொண்டிருந்தால், அவர் உங்களை விட்டு விலகுவதைப் போல சூழல் வரும்போது நீங்கள் பயப்படுவீர்கள். நீங்கள் அதிகாரத்தின் மீது பற்று கொண்டிருந்தால், யாராவது உங்கள் இடத்தைப் பிடித்துக்கொள்வார்கள் என்ற அச்சுறுத்தல் வரும்போது நீங்கள் பயப்படுவீர்கள்.
பதட்டத்திற்கான காரணம் தேர்வு செய்யும் வாய்ப்பு. இது அல்லது அது, எது சரி அல்லது தவறு, நல்லது அல்லது கெட்டது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு குழப்பம் இருக்கும்போது, உங்களுக்கு பதட்டம் இருக்கும். இது எதிர்காலத்தைப் பற்றிய கவலை. கடந்த காலத்தில் நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்காக நீங்கள் இப்போது வருந்துவீர்கள். இதுவும் பதட்டம் தான் . பதட்டம் என்பது கடந்த காலத்துடனோ அல்லது எதிர்காலத்துடனோ தொடர்புடையது. அது நிகழ்க்காலத்தோடு தொடர்புடையதில்லை.
பயம் வரம்பைத் தாண்டினால், அது அளவுக்கு மீறிய அச்சமாக மாறும். பதட்டம் வரம்பை மீறும் போது, அது பதட்டக் கோளாறாக மாறுகிறது. தேர்வு இல்லாத விழிப்புணர்வு பயம் மற்றும் பதட்டத்திற்கு அப்பால் செல்ல வழிவகுக்கும்.
காலை வணக்கம் ... தெரிவு இல்லாமல் விழிப்புடன் இருங்கள்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments