10.5.2016
கேள்வி: ஐயா .. தனக்குள் இருக்கும் புத்தரை அறிந்தவரும், அறியாதவரும் சந்திக்கும்பொழுது , புத்தர் அடுத்தவரில் இருக்கும் புத்தரை எப்படி உணர்வார்?
பதில்: எல்லாவற்றிற்கும் ஆதாரமானது எதுவோ அதை உணர்ந்தவர் புத்தர். நீங்கள் ஆதாரத்தை உணர்ந்தவுடன், ஆதாரமாகவே ஆகிவிடுகிறீர்கள். நீங்கள் ஆதரப்பொருளாக இருப்பதால், நீங்கள் எதைப் பார்த்தாலும், அதில் உங்கள் இருப்பை உணருவீர்கள், நீங்கள் யாரைப் பார்த்தாலும், அவரில் உங்களை பார்ப்பீர்கள். நீங்கள் புத்தத்தன்மையை அடைந்தவுடன், சாதாரண மனங்கள் என்ன நினைக்கும் என்று உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் புத்தத்தன்மை எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
உங்கள் உடலில் நீங்கள் இருப்பதைப் போல, நீங்கள் எல்லா இடங்களிலும் இருப்பீர்கள். உங்கள் உடலை அதிர்வுறுவது போல, நீங்கள் எல்லா இடங்களிலும் அதிர்வுறுவீர்கள். உங்கள் உடலில் துடிப்பதைப் போல, நீங்கள் எல்லா இடங்களிலும் துடிப்பீர்கள். எனவே, எல்லோருக்குள்ளும் புத்ததன்மை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். எந்த தருணத்திலும் அவர்கள் அதை உணர முடியும். புத்தருக்கும் மற்றவருக்கும் இடையில் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது. புத்தர் தனக்குள் இருக்கும் புத்தத்தன்மையை அறிந்தவர். மற்றவர்கள் இன்னும் அதை அறியவில்லை. அவ்வளவுதான்.
காலை வணக்கம் ... மற்றவர்களில் உங்களைப் பாருங்கள் ...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments