31.5.2015
கேள்வி: திருமண வாழ்க்கையில் இல்லாதது என்ன?
பதில்: பெரும்பான்மையான குடும்பங்களில் அன்புதான் குறைவாக இருக்கிறது. அன்பின் பற்றாக்குறைதான் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம். சமூகம் காதலை கண்டிப்பதால், அன்பு அடக்கப்பட்டிருக்கிறது. அன்பிற்கு மாற்றாக கடமை உணர்வை சமூகம் கண்டறிந்துள்ளது.
கடமை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிரச்சினைகளை தீர்க்கிறது, முழுமையாக தீர்ப்பதில்லை. அன்பு இல்லாத நிலையில், கடமை செயல்பாட்டுக்கு வருகிறது. அன்பை வலுக்கட்டாயமாக கொண்டு வர முடியாது. எனவே கடமை சில விஷயங்களைச் செய்ய உங்களைத் தூண்டுகிறது. இது சமூகத்தின் சுமையை குறைக்கிறது, ஆனால் மறைமுகமாக அது பல சிக்கல்களை உருவாக்குகிறது.
பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்க அன்புணர்வை பாராட்டவும் ஊக்குவிக்கவும் வேண்டும்.
காலை வணக்கம் ... அன்பைப் பாராட்டுங்கள் ...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Komentáře