20.4.2016
கேள்வி: ஐயா, இப்போதெல்லாம் பெரும்பான்மையான மக்கள் , அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி , நான் ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்று நினைக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது?
பதில்: இது அவர்களின் திருமண வாழ்க்கை அவர்கள் எதிர்பார்த்தபடி இல்லை என்பதைக் காட்டுகிறது . கணவர் தனது மனைவியிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறார், அவளால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. மனைவி தன் கணவனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறாள், அவனால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. இப்போதெல்லாம் பெண்கள் கல்வி கற்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். எனவே, அவர்கள் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவத்தை விரும்புவதில்லை. அவர்களை சமமாக நடத்த வேண்டும். திருமணம் என்பது தியாகம் மற்றும் நன்றியுணர்வின் கலவையாகும்.
இருவரும் தங்கள் ஆணவத்தை தியாகம் செய்ய வேண்டும், அன்பு மற்றும் கவனிப்புக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் யாராக இருந்தாலும் , உங்கள் திருமண வாழ்க்கை திருப்தி அடையாது. நன்றியுணர்வு இல்லாத ஒரு கணவன் உடல் ரீதியாக எவ்வளவு வலிமையாக இருந்தாலும், மனைவியை திருப்திப்படுத்த முடியாது. ஏனென்றால் அவள் உணர்ச்சி சார்ந்தவள். உடல் ரீதியாக எவ்வளவு அழகாக இருந்தாலும், ஆணவம் கொண்ட ஒரு மனைவி தன் கணவனை திருப்திப்படுத்த முடியாது. ஏனெனில், அன்புதான் அழகு.
இருவரும் திருப்தியடையவில்லை என்றாலும் அல்லது உங்களில் யாரேனும் ஒருவர் திருப்தி அடையவில்லை என்றாலும், உங்கள் திருமண வாழ்க்கை மோசமாக இருக்கும். ஆணவத்தை தியாகம் செய்து நன்றியை வளர்க்க, ஒருவருக்கு ஆன்மீக அறிவு இருக்க வேண்டும். மக்களுக்கு ஆன்மீக அறிவை வழங்க இது சரியான தருணம். உங்கள் வாழ்க்கைத் துணைவர் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்கிறாரோ இல்லையோ, ஆன்மிக அறிவு இருந்தால் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
காலை வணக்கம்... ஆன்மீக அறிவின் வெளிச்சத்தில் உங்கள் திருமண வாழ்க்கையை நடத்துங்கள் ...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments