8.6.2015
கேள்வி: ஐயா ஒரு வாழ்க்கைத் துணையின்றி நான் அடிமன (Superconscious) நிலையை அடைய முடியாதா?
பதில்: உங்களால் முடியும். உண்மையில், உங்கள் வாழ்க்கைத் துணைவர் உங்களுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் அது தாமதமாகலாம். ஒவ்வொரு ஆணும் அவனுக்குள் ஒரு பெண்ணையும், ஒவ்வொரு பெண்ணும் அவளுக்குள் ஒரு ஆணையும் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் ஆண், பெண் குணங்கள் உள்ளன.
ஒரு ஆணில் இருக்கும் பெண் தன்மை 'அனிமா' என்று அழைக்கப்படுகிறது.
ஒரு பெண்ணில் இருக்கும் ஆண் தன்மை 'அனிமஸ்' என்று அழைக்கப்படுகிறது.
ஒரு ஆணில், ஆண் குணம் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் பெண் குணம் ஆதிக்கம் குன்றிய நிலையில் உள்ளது. ஒரு பெண்ணில், பெண் குணம் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் ஆண் குணம் ஆதிக்கம் குன்றிய நிலையில் உள்ளது. ஒரு ஆண் தனக்குள் இருக்கும் பெண்ணையும் ஒரு பெண் தனக்குள் இருக்கும்ஆணையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் ஆன் பெண் சேர்க்கை நிறைவடைகிறது.
சந்திர நாடி(இடகலை) என்பது பெண், சூர்ய நாடி (பிங்கலை) என்பது ஆண். இடது நாசி வழியாக சுவாசம் நடக்கும்போது, சந்திர நாடி ஆதிக்கம் செலுத்துகிறது. வலது நாசி வழியாக சுவாசம் நடக்கும்போது, சூர்ய நாடி ஆதிக்கம் செலுத்துகிறது. சூர்ய நாடி என்பது தர்க்கரீதியான புறமன நிலை. சந்திர நாடி என்பது நடுமன நிலை, இது உணர்ச்சிவசமானது.
சில நேரங்களில் சந்திர நாடி ஆதிக்கம் செலுத்துகிறது, சில சமயங்களில் சூர்ய நாடி ஆதிக்கம் செலுத்துகிறது. சில யோகப் பயிற்சிகளின் மூலம் சூர்ய நாடி மற்றும் சந்திர நாடி இரண்டுமே சமநிலையாகின்றன. இரு நாசியிலும் சுவாசம் சமமாக நிகழ்கிறது. பின்னர் சுழுமுனை என்ற மைய நாடி செயல்படுகிறது. இது அடிமன நிலை ஆகும்.
மூலதாரத்திலிருந்து வரும் ஆற்றல் (சக்தி) துரியத்திற்குச் சென்று அறிவுடன் (சிவம்) இணைகிறது. இது சிவா-சக்தி சங்கமமான சமாதி என்று அழைக்கப்படுகிறது. இது பேரின்பம் எனப்படுகிறது.
ஆண் பெண் இணைப்பில் இன்பநிலையை அடையும்போது, அவர்கள் சில விநாடிகளுக்கு புறமன நிலை மற்றும் நடுமன நிலையில் இருந்து துண்டிக்கப்படுகிறார்கள். அப்போது அடிமன நிலையின் இன்பத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
சமாதியில் நீங்கள் உங்கள் சக்தியை இழக்காமல் நீண்ட காலத்திற்கு அடிமன நிலையில் இருப்பீர்கள். எனவே இது சாதாரண இன்பத்தை விட ஆழமானது. அதனால்தான் இது பேரின்பம் என்று அழைக்கப்படுகிறது.
காலை வணக்கம் ... ஆனந்தமாக இருங்கள் ...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments