தியான நுட்பங்களில் பன்முகத்தன்மை ஏன்?
30.4.2016
கேள்வி: தியானத்தின் உதவியுடன் கடவுளை உணர்ந்து கொள்வதே இறுதி இலக்கு. பிறகு ஏன் பல வகையான தியானம் தேவைப்படுகிறது? விளக்கவும்.
பதில்: இயற்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. மரங்களின் வகைகள், பல்வேறு வகையான புழுக்கள், எறும்புகளின் வகைகள், ஊர்வன வகைகள், பறவைகளின் வகைகள், விலங்குகளின் வகைகள் மற்றும் மனிதர்களின் வகைகள். மனிதன் இயற்கையின் தன் மாற்றத்தில் உச்சம் என்பதால், அவனும் வகைகளை உருவாக்க முயற்சிக்கிறான். அவன் பல வகையான உணவுகளைத் தயாரிக்கிறாரன் , பலவிதமான ஆடைகளை அணிந்துகொள்கிறான், பலவகையான பொருள்களைப் பயன்படுத்துகிறான்.
அவன் தினமும் ஒரே மாதிரியான பொருளைப் பயன்படுத்தினால், சலிப்படைந்துவிடுவான். அதேபோல், அவனுக்கு ஒரே வகை தியானம் வழங்கப்பட்டால், அவன் சலிப்படைந்து ஆன்மீனுகத்தில் ஆர்வத்தை இழந்துவிடுவான். உலகில் பல்வேறு வகையான மக்கள் இருப்பதால், பலவிதமான தியான நுட்பங்கள் வழங்கப்பட்டால், அவரவர் மனநிலைக்கு ஏற்ப அவர்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். மனதின் வெவ்வேறு நிலைகளில் உள்ள மக்களுக்கு உதவ பல்வேறு வகையான தியான நுட்பங்கள் வகுக்கப்பட்டுள்ளன. உங்கள் மனநிலை மாறும்போது, உங்கள் தியான நுட்பமும் மாறும்.
காலை வணக்கம் .. உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தியான நுட்பத்தைத் தேர்வுசெய்யுங்கள் ..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்