1. 4. 2016
கேள்வி: ஐயா, நான் தியானம் செய்ய விரும்புகிறேன், ஆனால் நான் சோம்பேறியாக இருக்கிறேன்... இந்த பழக்கத்தை எவ்வாறு மாற்றுவது என்பதை அறிய விரும்புகிறேன்... தயவுசெய்து எனக்கு வழிகாட்டுவீர்களா?
பதில்: நீங்கள் சோம்பேறியாக இருக்கும்போதும் தியானிக்க முடியாது, அதிவேகமாக இருக்கும்போதும் தியானிக்க முடியாது. எனவே, தியானிக்க நீங்கள் சோம்பேறியாகவோ அல்லது அதிவேகமாகவோ இருக்கக்கூடாது. இவ்விரண்டிற்கும் நடுவில் இருக்க வேண்டும். நீங்கள் சோம்பேறியாக இருக்கும்போது, நேரடியாக தியானம் செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக, உடற்பயிற்சிகள் அல்லது ஆசனம் மற்றும் பிராணயாமம் போன்ற சில பயிற்சிகளை உங்கள் உடலுக்கு கொடுங்கள். இது சோம்பலிலிருந்து விடுபடும் வகையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பின்னர் தியானம் செய்யுங்கள்.
நீங்கள் அதிவேகமாக இருக்கும்போது, தியானத்தையும் நேரடியாக முயற்சிக்க வேண்டாம். முதலில், உங்கள் உடலையும் மனதையும் ஓய்வுபடுத்துங்கள். பின்னர் தியானிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் விழிப்புணர்வோடு ஓய்வெடுத்தால், நன்றாக தியானிக்கலாம். எனவே, முதலில் உங்கள் உடலையும் மனதையும் தியானிக்க ஏற்ற நிலையில் வைத்திருங்கள்.
காலை வணக்கம் .. விழிப்பான ஓய்வில் இருங்கள் ..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
Comments