தியானம், தூக்கம் மற்றும் நச்சுகள்
13.4.2016
கேள்வி: தியானத்தையும் கற்பிக்கும் யோகா ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. அவருடைய கேள்வி என்னவென்றால், அவருடைய மாணவர்கள் சிலர் தியானிக்கும்போது தூங்கினார்கள், அதற்கான காரணத்தை அறிய விரும்பினர். அவர்கள் தூங்குவதற்க்கு உடலில் உள்ள அசுத்தங்கள் தான் காரணம் என்று தியான முகாம்களை நடத்துபவர் ஒருவர் கூறியுள்ளார். தயவு செய்து தெளிவுப்படுதவும்.
பதில்: தியானத்தின் போது தூங்க மூன்று காரணங்கள் உள்ளன. 1. பழக்கம் அல்லது போதிய தூக்கமின்மை 2. குறைந்த ஆற்றல் நிலை 3. அதிக நச்சுகள். பிறந்த நாள் முதல், வழக்கமாக, நீங்கள் கண்களை மூடும்பொழுதெல்லாம் தூங்குவீர்கள். எனவே, தியானத்திற்காக கண்களை மூடும்போதும் நீங்கள் தூங்குகிறீர்கள். தியானத்திற்கு முன் வலுவான உறுதிமொழியால் இந்த பழக்கத்தை நீங்கள் வெல்ல வேண்டும். இரவில் நன்றாக தூங்கவில்லை என்றாலும், போதுமான தூக்கம் இல்லாததால் நீங்கள் தியானத்தின் போது தூங்குவீர்கள். இரவு நேரங்களில் நன்றாக தூங்குவதன் மூலம், இந்த தடையை நீங்கள் சமாளிக்க முடியும்.
உங்கள் ஆற்றல் நிலை குறைவாக இருக்கும்போது, உங்கள் மூளைக்கு ஆற்றல் செல்வது துண்டிக்கப்படும். எனவே, நீங்கள் தியானத்தின் போது தூங்குவீர்கள். நீங்கள் அதிகமாக சோர்வாக இருக்கும்போது, தியானத்திற்கு பதிலாக ஓய்வெடுக்க முயற்சி செய்யலாம்.
உங்களிடம் அதிக நச்சுகள் இருக்கும்போது, நச்சுகளை அகற்ற உங்கள் ஆற்றல் பயன்படுத்தப்படும். உங்கள் கழிப்பறை, குளியலறை மற்றும் சமையலறையில் அடைப்புகள் உள்ளன அல்லது சில உயிரினங்கள் உங்கள் வீட்டில் எங்காவது இறந்துவிட்டன என்று வைத்துக்கொள்வோம். அடைப்புகள் மற்றும் இறந்த உயிரினங்களை அகற்ற குடும்ப உறுப்பினர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். பிற நடவடிக்கைகள் நிறுத்தப்படும். அதேபோல், உங்கள் உடலில் உள்ள ஆற்றல் நச்சுகளை அகற்ற முன்னுரிமை அளிக்கிறது. எனவே, நீங்கள் சோம்பலை உணர்கிறீர்கள், தூங்குகிறீர்கள். தியானம் செய்வதற்கு முன் தூய்மைப்படுத்தும் பிராணயாமங்களை பயிற்சி செய்து பின்னர் தியானம் செய்யுங்கள்.
காலை வணக்கம் ... தவறாமல் உடற்பயிற்சிகளை செய்யுங்கள் ... 💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்