28.3.2016
கேள்வி: தாந்த்ரீக காதல் என்றால் என்ன? சாதாரண காதலுக்கும் தாந்த்ரீக காதலிக்கும் என்ன வித்தியாசம்? இது தெய்வீகமா?
பதில்: விழிப்புணர்வு கொண்ட காதல் தாந்த்ரீக காதல் ஆகும். சாதாரண காதலில், விழிப்புணர்வு இல்லை. இதுதான் இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு. தாந்த்ரீக அன்பில், நீங்கள் ஒருவரை நேசிக்கும்போது உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் கவனம் உங்கள் ஆன்மீக வளர்ச்சியில் இருப்பதால், ஏமாற்றுவதற்க்கோ அல்லது ஏமாறுவதற்க்கோ வாய்ப்பில்லை . உங்கள் காதலர் உங்களைப் பயன்படுத்திக்கொண்டார்என்று கூற மாட்டீர்கள். மாறாக, நீங்கள் ஆன்மீக ரீதியில் எவ்வளவு வளர்ந்திருக்கிறீர்கள் என்று பார்ப்பீர்கள்.
உங்கள் காதலருடன் நீங்கள் நெருக்கமாக இருக்கும்போது, உங்களில் உள்ள ஆற்றல் வெடிக்கும். உங்களுக்குள் ஊடுருவுவதற்கான அந்த வாய்ப்பை நீங்கள் இழக்க மாட்டீர்கள். உங்கள் காதலருடன் நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு ஆழமாக உங்களுக்குள் செல்கிறீர்கள். தாந்த்ரீக அன்பின் நோக்கம் முழுமையை அடைவது. எனவே உங்கள் காதலருக்கு எதிராக நீங்கள் புகார்களை எழுப்ப மாட்டீர்கள். மாறாக, சாத்தியமான எல்லா வழிகளிலும் நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சிப்பீர்கள். உங்கள் காதலர் மூலமாக நீங்கள் ஆன்மீக ரீதியில் வளர்ந்ததால் உங்கள் காதலருக்கு நீங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள். காதலே தெய்வீகமானதுதான் . ஒரு வகையில், தாந்த்ரீக காதல் மிகவும் தெய்வீகமானது என்று கூறலாம்.
காலை வணக்கம் ... விழிப்புணர்வுடன் காதலியுங்கள் ..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
Comments