3.4.2016
கேள்வி: ஐயா, ஞானமடைந்தவர்கள் ஏன் தங்கள் அனுபவங்களைப் பற்றி விவாதிப்பதில்லை ?
பதில்: அனுபவங்கள் மனதுடன் தொடர்புடையவை. ஞானம் என்பது அறிவுடன் தொடர்புடையது. அரிதாக சில ஞானிகள் தங்கள் அனுபவங்களை விளக்கியுள்ளனர். இருப்பினும், ஞானமடைந்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் அனுபவங்களை விளக்கவில்லை. உங்கள் அனுபவங்களை மற்றவர்களிடம் சொன்னால், நீங்கள் உயர்ந்தவர் என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் எண்ணத்தோன்றும். மேலும், உங்கள் அனுபவமும் மற்றவர்களின் அனுபவமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, உங்கள் அனுபவங்களைச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
அடுத்தவர்கள் ஆன்மிகத்தில் மேம்பட்டிருந்தாலும், நீங்கள் அடைந்த அனுபவத்தை இன்னும் அவர்கள் அடையாததால், அவர்கள் இன்னும் ஆன்மீகத்தில் மேம்படவில்லை என்று நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதற்கான காரணம் நீங்கள் அவர்களை தவறாக வழிநடத்துகிறீர்கள். நீங்கள் ஞான நிலையை அடையும்போது, எல்லா அனுபவங்களும் மாயையைத் தவிர வேறில்லை என்பதை அறிந்து கொள்வீர்கள். எனவே, உங்கள் அனுபவத்தைப் பற்றி நீங்கள் விவாதிக்க மாட்டீர்கள். அனைவருக்கும் பொதுவான மற்றும் மிகவும் விஞ்ஞானபூர்வமான சில அனுபவங்கள் உள்ளன. தேவைப்பட்டால், நீங்கள் அவற்றை பகிரலாம்.
பெரிய ஞானிகள் தங்களை வெளிப்படுத்த முயற்சிக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் தம்முடைய சீடர்களை அவர்கள் அடைந்த ஞானத்தை அடையச் செய்வார்கள்.
காலை வணக்கம் ... அனுபவங்களுக்கு அப்பால் செல்லுங்கள் ..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
コメント