30.7.2015
கேள்வி: ஞானமடைதல் என்றால் என்ன? தியானம் இல்லாமல் ஒருவர் ஞானம் அடைய முடியுமா? ஞானமடைதலின் நோக்கம் என்ன? உலகில் உள்ள அனைத்து மக்களும் ஞானமடைந்துவிட்டால், அடுத்து என்ன?
பதில்: ஞானமடைதல் என்பது ஒற்றுமையை உணரும் ஒரு ஆழமான உணர்வு. ஞானமடைதல் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.
1. சுமையிலிருந்து விடுபடுவது
2. குழப்பங்களிலிருந்து விடுபடுவது
குறைந்த விழிப்புணர்வு காரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்கிக்கொள்கிறீர்கள். அந்த பிரச்சினைகள் உங்களுக்கு சுமையாகின்றன. ஞானமடைதல் உங்கள் சுமையை குறைக்கிறது.
வரம்பு வெடித்து உங்கள் விழிப்புணர்வு வரம்பற்றதாகிறது. ஞானமடைதல் எல்லாவற்றையும் தெளிவாகவும் பிரகாசமாகவும் ஆக்குகிறது. அறிவைச் சூழ்ந்துள்ள இருள் மறைகிறது.
ஞானம் பெற தியானம் அவசியம். தியானம் என்பது மூடிய கண்களுடன் உட்கார்ந்திருப்பது மட்டுமல்ல. ஆழமாக யோசித்துப்பார்த்தால் எதுவெல்லாம் உங்களை தியான நிலைக்கு இட்டுச் செல்கிறதோ அதுவெல்லாம் தியானம்தான். மேலும், ஞானமடைய ஒரு சாமர்த்தியம் முக்கியம். ஞானமடைதலின் நோக்கம் நோக்கமற்றது மற்றும் சுதந்திரமாக இருப்பது. எல்லைக்கு நோக்கம் உள்ளது. எல்லையற்றதற்கு எந்த நோக்கமும் இல்லை.
உலகில் உள்ள அனைத்து மக்களும் ஞானமடைந்துவிட்டால், யுத்தமோ, குழப்பமோ, நோயோ, குற்றமோ இருக்காது. எல்லா இடங்களிலும் அமைதி நிலவும். எந்த மதமும் இருக்காது, ஆன்மீக அமைப்புகளும் இல்லை, நீதிமன்றமும் இல்லை, பாதுகாப்புப் படையினரும் மருத்துவமனைகளும் இல்லை. அன்பும் இரக்கமும் எல்லா இடங்களிலும் மேலோங்கும். உலகம் மிகவும் ஆனந்தமாக இருக்கும். ஆனால் உலகம் முடிவுக்கு வந்துவிடாது...😜
காலை வணக்கம்... ஞானியாக இருங்கள்...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments