9.4.2016 கேள்வி: ஐயா… நான் என் உடலுக்கு வெளிப்பக்கம் உள்ள வெளியுடன் என்னை இணைக்க முயற்சிக்கிறேன் .. பின்னர் சுவாசத்தில் ஒரு பெரிய நிறுத்தம் ஏற்படுகிறது, இதனால் எனக்கு பயம் ஏற்படுகிறது. இது ஏன்? பதில்: நீங்கள் உங்களை வெளியுடன் இணைக்க முயற்சிக்கவில்லை. உங்கள் மனதை உங்கள் உடலுக்கு வெளிபக்கம் உள்ள வெளியுடன் இணைக்க முயற்சிக்கிறீர்கள். உங்கள் உடலுக்கு வெளிபக்கம் உள்ள வெளியுடன் உங்களை இணைக்க முடியாது. ஏனெனில் வெளிதான் உங்கள் சுய நிலையாக இருக்கிறது. அது எப்போதும் எல்லாவற்ரோடும் இணைந்துள்ளது. உங்களை நீங்கள் உணரும்போது, உங்களுக்கு எந்த பக்கமும் இல்லை என்பதை அறிந்து கொள்வீர்கள். உடல், மனம் மற்றும் வேறு ஏதேனும் பொரு ட்களுடன் நீங்கள் உங்களை அடையாளப் படுத்துவதால் , பக்கங்கள் இருப்பதாக உணர்கிறீர்கள்.
நீங்கள் வெளியைப்பற்றி நினைக்கும் போது, உங்கள் மன அதிர்வெண் குறைகிறது. எனவே, உங்கள் சுவாசம் நிறுத்தப்பட்டதைப் போல உணர்கிறீர்கள், ஆனால் அது அவ்வாறு இல்லை. சுவாசம் ஆழமற்ற நிலையை அடைந்திருக்கும். பயிற்ச்சியின் ஆரம்ப நாட்களில், இந்த ஆழமற்ற மூச்சு பற்றிய பயம் ஏற்படக்கூடும், ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அது உங்களுக்குப் பழக்கப்பட்டுவிடும். நீங்கள் தியானத்தை முடித்தவுடன், உங்கள் சுவாசம் இயல்பு நிலைக்கு வரும். எனவே, எந்த பயமும் தேவையில்லை. உங்கள் சுவாசத்தை தியான முறைகளுடன் இணைத்தால் கூட, தியானத்தில் நீங்கள் எங்காவது சிக்கிக்கொள்ளவோ அல்லது சில நேரங்களில் வேறு சில சிக்கல்களை எதிர்கொள்ளவோ வாய்ப்பிருக்கிறது. இதைத் தவிர்க்க, ஒரு குருவின் வழிகாட்டுதலின் கீழ் அதைப் பயிற்சி செய்வது நல்லது. காலை வணக்கம்.. பக்கங்களற்ற நிலையை அடையுங்கள் ...💐 வெங்கடேஷ் - பெங்களூர் (9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments