4.5.2016
கேள்வி: ஐயா..இப்போழுதெல்லாம் நல்ல தியானப் பயிற்சியினால் அலுவலக வேலை மிகவும் சிரமமின்றி நடைபெறுவதாக உணர்கிறேன், மேலும் வேலைகளை விரைவாக முடிக்க முடிகிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், என் மனதில் இன்னொரு பகுதி இது எளிதில் சம்பாதித்த பணம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன். இதன் விளைவாக எனக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. இதை சரிசெய்ய எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. மனதின் ஒரு பகுதி அது சுலபமக சம்பாதித்த பணம் என்று நினைக்கிறது, மேலும் மனதின் மற்றொரு பகுதி நீங்கள் நிறைய விஷயங்களைச் செய்ய வல்லவர், நிதி விஷயம் ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்ரெல்லாம் கூறுகிறது. இந்த வாழ்க்கையை நான் எவ்வாறு சமன்படுத்திக்கொள்வது? நான் ஒரு குழப்பத்தில் இருக்கிறேன். தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்.
பதில்: நீங்கள் தியானம் செய்யும்போது, உங்கள் செயல்திறன் மேம்பட்டுள்ளது. எனவே, உங்கள் வேலையை வேகமாக முடிக்க முடிகிறது. உண்மையில் அது நல்லது. ஆனால் நீங்கள் பெறும் சம்பளம் எளிதில் சம்பாதித்த பணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இப்போது நீங்கள் சிரமங்களை அழைக்கிறீர்கள். நீங்கள் அதிக மன அழுத்தத்துடன் அதிகம் வேலை செய்ய விரும்புகிறீர்கள். உங்கள் வேலைக்கு அந்தளவு சம்பளத்தை சமூகம் நிர்ணயித்துள்ளது. எளிதில் சம்பாதித்த பணம் என்று ஏன் நினைக்கிறீர்கள்?
உங்களிடம் அதிக பணம் இருந்தால், சமூகத்தின் நலனுக்காக சில சதவீத பணத்தை பயன்படுத்துங்கள். உங்களிடம் வேலை / போதுமான பணம் இல்லாதபோது, நிதி விஷயங்கள் ஒரு பெரிய பிரச்சினை. உங்களிடம் பாதுகாப்பான வேலை மற்றும் போதுமான பணம் இருக்கும்போது, நிதி விஷயங்கள் பெரிய பிரச்சினை அல்ல. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை செய்வதற்கு உங்களுக்கு பணம் தேவை. ஒன்று நீங்கள் உங்கள் பணத்தை செலவிட வேண்டும் அல்லது மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்க வேண்டும். எனவே, பணத்தை புறக்கணிக்காதீர்கள்.
சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து உங்கள் திறன் என்ன என்பதை பகுப்பாய்வு செய்யுங்கள். பின்னர், நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை முடிவு செய்யுங்கள். அதற்கேற்ப திட்டமிட்டு வேலை செய்யுங்கள். உலகம் முழுவதும் பலர் பல விஷயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அனைவருக்கும் உதவ முடியாது. எனவே, உங்கள் வரம்பை உணர்ந்து, நீங்கள் எந்தப் பகுதியில் பணியாற்றப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள்.
காலை வணக்கம் .. சிரமங்களை தானாக முன்வந்து அழைக்க வேண்டாம் ..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments