2.4.2016
கேள்வி : ஐயா, வாழ்க வளமுடன் .. சூரியனுக்கு ராகு மற்றும் கேது என்ற இரண்டு காந்த கோடுகள் இருப்பதைப் போல .. பூமி மற்றும் அணுக்கள் போன்ற அனைத்து பொருட்களுக்கும் காந்த கோடுகள் உள்ளதா? ஆம் என்றால், எப்படி? இல்லையென்றால், அது சூரியனுக்கும் நட்சத்திரங்களுக்கும் மட்டும் இருக்கிறதா ? ஏன்?
பதில்: ஆம். அனைத்து பொருட்களுக்கும் காந்த கோடுகள் உள்ளன. ராகு மற்றும் கேது ஆகியவை சூரியனின் காந்த கோடுகள். ஒன்று வட துருவமும் மற்றொன்று தென் துருவமும். எதெல்லாம் சுழல்கிறதோ அவற்றிற்கெல்லாம் துருவங்கள் உள்ளன. எனவே, இறைத்துகள்கள் முதல் நட்சத்திரங்கள் வரை அனைத்து பொருட்களுக்கும் துருவங்கள் உள்ளன. விண்மீன் திரள்கள் மற்றும் பிரபஞ்சத்திற்கு கூட துருவங்கள் இருக்க வேண்டும். வெளியை தவிர, எல்லாவற்றிலும் துருவங்கள் உள்ளன. எவற்றிர்க்கெல்லாம் துருவங்கள் இருக்கிறதோ அவற்றிர்க்கெல்லாம் காந்த கோடுகள் உள்ளன. பொருளின் அளவைப் பொறுத்து , காந்தக் கோடுகளின் அளவு மற்றும் தீவிரம் மாறுபடும்.
உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் வட துருவமும் தென் துருவமும் உள்ளன. முழு உடலுக்கும் கூட வட துருவமும் தென் துருவமும் உள்ளன. மனம் காந்த அலைகள் என்பதால் நம் மனதில் கூட நேர்நிறை மற்றும் எதிர்மறை உள்ளது. இந்த இருமைக்கு அப்பாற்பட்ட நிலைதான் சமாதி நிலை. இந்த நிலையை ஏகாந்தம் என்றும் அழைக்கலாம். அனைத்து ஆன்மீக பயிற்சிகளின் நோக்கமும் இதை இருமை நிலைக்கு அப்பால் உள்ள நிலையை அடைவதே ஆகும்.
காலை வணக்கம் .. தனியாக இருங்கள்.💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
எளிமையான விளக்கம். இன்றைய தேவையான ஆற்றல் இதைபடிக்கும்பொழுதே கிடைத்ததாக உணர்ந்தேன். காந்ததுருவத்தில் என்ன ஆன்மீகம் என்றே படித்தேன். பின் உணர்ந்தேன் ஏகாந்தமே ஆன்மலயமாக நிலைப்பேறாக. நன்று.