5.6.2015
கேள்வி: ஐயா, தயவுசெய்து "காதலுக்கு கண் இல்லை" என்பதைப் பற்றி கருத்து தெரிவிக்கவும்.
பதில்: காதலுக்கு கண் இல்லை. ஏனெனில் அது தர்க்கரீதியான நோக்குடையது அல்ல. அது உணர்ச்சி சார்ந்ததாகும். ஒரு நபர் நல்லவரா, கெட்டவரா, நம்பகமானவரா அல்லது ஏமாற்றுபவரா என்பதை தர்க்கம் பகுப்பாய்வு செய்யும். ஆனால் காதல் அவ்வாறு பகுப்பாய்வு செய்யாது. ஏனெனில் காதல் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் தர்க்கம் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டது.
நம்பிக்கை ஒரு நபரின் நேர்மறையான பக்கத்தைப் பார்க்கிறது. ஒரு நபரின் எதிர்மறையான பக்கத்தை சந்தேகம் அறியும். எல்லோருக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறைகள் உள்ளன. இரண்டையும் நீங்கள் புரிந்து கொண்டால், அப்போதுதான் நீங்கள் அந்த நபருடன் நிம்மதியாக வாழ முடியும். அடிப்படையில், பெண்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள், அதனால் அவர்களின் வலது பக்க மூளை மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆண்கள் தர்க்கரீதியாக செயல்படுவதனால், அவர்களின் இடது பக்க மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
இருவரும் ஒருவருக்கொருவர் நேசிக்கும்போது, இந்த குணங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. அதனால்தான் காதல் தோல்விக்குப் பிறகு ஒரு பையன் மனச்சோர்வுக்குச் சென்றுவிடுகிறான். ஆனால் ஒரு பெண் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாள். காதல் இல்லாத தர்க்கம் பாலைவனம் போன்றது. தர்க்கம் இல்லாத காதல் கடல் போன்றது. இரண்டும் சாகுபடிக்கு பயனுள்ளதாக இல்லை. இரண்டுமே சரியான விகிதத்தில் கலக்கும்போது, சாகுபடி சாத்தியமாகும்.
வாழ்க்கை சாகுபடி போன்றது. எனவே தர்க்கம் மற்றும் காதல் இரண்டும் அவசியம். உங்களுக்கு அன்பு இல்லையென்றால், வாழ்க்கை பரிதாபமாக இருக்கும். உங்களுக்கு தர்க்கம் எதுவும் தெரியாவிட்டால், நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். இரண்டும் சமமாக இருந்தால், வாழ்க்கை சமநிலையில் இருக்கும். வலப்பக்க மூளை மற்றும் இடப்பக்க மூளை இரண்டையும் சமமாக செயல்படுத்த வேண்டும்.
ஆன் தர்க்கத்தால் சூடாக இருக்கிறான். மேலும் காதல் காரணமாக பெண் குளிர்ச்சியாக இருக்கிறாள். அவர்கள் ஒன்றுபடும்போது, வெப்பமும் குளிர்ச்சியும் சமநிலையை அடைகிறது. புற மன (conscious mind) நிலையில் தர்க்க செயல்படுகிறது. நாடு மன (subconscious mind )நிலையில் காதல் செயல்படுகிறது. அடி மன (super-conscious mind) நிலையில் விழிப்புணர்வுகாதல் (conscious love ) செயல்படுகிறது.
தர்க்கம் என்பது அறிவு . காதல் பெரிய ஆற்றல். அறிவும் ஆற்றலும் ஒன்றிணைந்தால், பெரிய மாற்றம் நிகழ்கிறது. நீங்கள் அடிமன நிலைக்கு உயர்த்தப்படுகிறீர்கள். ஒருவர் புறமன நிலையில் இருந்து நடுமன நிலைக்கும் , நடுமன நிலையில் இருந்து அடிமன நிலைக்கும் வளர வேண்டும். அதுவே ஆண், பெண் சேர்க்கையின் நோக்கம்.
காலை வணக்கம் ... விழிப்புணர்வுடன் காதலியுங்கள்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments