26.7.2015
கேள்வி: பார்ப்பது அல்லது கவனிப்பது ஒருமுகப்படுத்துதலுக்கு உட்பட்டதா? மனம் அல்லது எண்ணங்களை கவனிப்பதும் ஒரு முயற்சிதான். எந்த முயற்சியும் இல்லாமல் அதை எப்படி கவனிப்பது?
பதில்: கவனிப்பது ஒருமுகப்படுத்துதல் அல்ல. அது தளர்வு. ஒருமுகப்படுத்துதலுக்கு முயற்சி தேவை. அதனால்தான் அது உங்களை சோர்வடையச் செய்கிறது. ஒருமுகப்படுத்துதல் என்பது ஒரு விஷயத்தில் உங்கள் கவனத்தை செலுத்துவது. இது பிரத்தியேகமானது. அதில் தேர்வு இருக்கிறது. கவனிப்பது என்பது நடப்பது எல்லாவற்றையும் கவனிப்பது. இது உள்ளடக்கியது. இது தேர்வு இல்லாதது.
ஆரம்பத்தில், மனதை கவனிப்பதற்கு ஒரு முயற்சி தேவை. ஏனெனில் ஒருமுகப்படுத்துதல் காரணமாக மனம் பதற்றமடைந்திருக்கிறது. முயற்சி கவனம் செலுத்துவதற்கு அல்ல, பதற்றத்திலிருந்து ஓய்வெடுப்பதற்கு ஆகும். சிறிது நேரம் கழித்து, நீங்கள் முயற்சி இல்லாமலே கவனிப்பீர்கள்.
கவனிக்கும் பொழுது எதனோடும் சம்பந்தப்படுவதில்லை. நீங்கள் எதனோடாவது சம்பந்தப்பட்டிருந்தால், அதை நீங்கள் கவனிக்க முடியாது. எதையாவது கவனிக்க, சிறிது இடைவெளி இருக்க வேண்டும். சம்பந்தப்படுவதற்கு இடைவெளி இருக்கக்கூடாது.
நீங்கள் எதனுடனாவது ஈடுபடுத்தும்போது, மற்ற விஷயங்கள் உங்களைத் தொந்தரவு செய்யும். நீங்கள் கவனிக்கும்போது, எதுவும் உங்களைத் தொந்தரவு செய்யாது. ஏனென்றால் நீங்கள் எல்லாவற்றையும் தேர்வின்றி கவனிக்கிறீர்கள்.
காலை வணக்கம் ... விழிப்பாய் இருங்கள்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments