15.6.2015
கேள்வி: ஐயா, இன்றைய கலப்படம் செய்யப்பட்ட உணவு மற்றும் உணவில் விஷ இரசாயனங்கள் பயன்படுத்துவது குறித்து எனக்கு ஒரு கேள்வி உள்ளது. இந்த சிக்கலை எவ்வாறு சமாளிப்பது?
பதில்: கலப்படம் என்பது உணவுப் பொருளின் அளவை மூல வடிவத்திலோ அல்லது தயாரிக்கப்பட்ட வடிவத்திலோ அதிகரிப்பதற்காக ஒரு உணவுப் பொருளுக்கு மற்றொரு பொருளைச் சேர்ப்பதாகும், இதன் விளைவாக உணவுப் பொருளின் உண்மையான தரம் இழக்கப்படலாம். இந்த பொருட்கள் கிடைக்கக்கூடிய பிற உணவு பொருட்களகவோ அல்லது உணவு பொருட்கள் அல்லாததாகவோ இருக்கலாம்.
உயிர்வாழ மிகவும் அடிப்படை விஷயம் உணவு. எனவே உணவில் கலப்படம் செய்வது மனிதாபிமானமற்றது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு பேராசையே காரணம். மற்ற துறைகளில் உள்ள பலர் சட்டவிரோத செயல்களைச் செய்து பணக்காரர்களாகி வருகின்றனர். இதைப் பார்த்த உணவுத் துறையினருக்கும் பேராசை உண்டாகிறது, பணக்காரர்களாக ஆக சட்டவிரோத செயல்களைச் செய்கிறார்கள். இதன் மூலம் எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள்.
இப்போது இந்த மக்கள், "மற்றவர்கள் நிறுத்தட்டும், நாங்களும் நிறுத்துகிறோம் " என்று கூறுகிறார்கள். என்ன செய்ய? ஒன்று நீங்கள் உணவை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் அல்லது கிடைக்கக்கூடிய உணவிற்கு நீங்கள் ஒத்துப்போக வேண்டும். வேறு வழியில்லை. நீங்கள் வெளி உலகத்தை மாற்ற முடியாது. கிடைக்கக்கூடியதை நீங்கள் ஏற்றுக்கொண்டு ஒத்துப்போனால், உங்களுக்குள் இருக்கும் அறிவு விஷத்தை அமிர்தமாக மாற்றும்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் உணவை உண்ணும் பொது கலப்படம் செய்யவில்லையா? தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டே நீங்கள் உணவு உண்பதில்லையா? ஒருவரிடம் பேசிக்கொண்டே நீங்கள் உணவு உண்பதில்லையா ? எதையாவது நினைத்துக்கொண்டே நீங்கள் உணவு உண்பதில்லையா? என்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் நீங்கள் உணவு உண்ணவில்லையா?
இந்த விஷயங்களும் கலப்படத்தின் கீழ் வருகின்றன. முதலில் உங்கள் கலப்படத்தை நிறுத்துங்கள். விழிப்புணர்வுடன் உணவை உண்ணுங்கள். விழிப்புணர்வு இல்லாமல் நீங்கள் எதை சாப்பிட்டாலும் அது விஷமாகிறது. விழிப்புணர்வுடன் நீங்கள் எதை சாப்பிட்டாலும் அது அமிர்தமாகிறது.
காலை வணக்கம் ... விழிப்புடன் இருந்து அமிர்தமாக மாறுங்கள்...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments