top of page
Writer's pictureVenkatesan R

கர்மா கோட்பாட்டில் கருத்தியல் மாற்றம்

6.5.2016

கேள்வி: ஐயா, இன்று நாம் படக்கூடிய கஷ்டங்கள், உடல்நலக்குறைவு, செல்வ இழப்பு, சமுதாயத்தால் அவதூறு செய்யப்படுவது போன்றவை அனைத்திற்கும் தெரிந்தோ தெரியாமலோ நேற்றோ அல்லது முந்தைய பிறப்பிலோ நாம் செய்த தவறுகள்தான் காரணமா? இல்லையெனில், இது ஒரு அனுமானமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது நம் முன்னோர்களின் பரிசளிப்பா?


பதில்: ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. அறிவியல் கூட அதை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இயற்கையின் இந்த செயல் - விளைவு விதி கர்மா கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. உங்கள் துன்பங்களுக்கான காரணங்கள் கடந்த காலத்தில் நீங்கள் செய்த உங்கள் சொந்த செயல்களாகும். அவை உங்கள் முன்னோர்களின் பரிசுகளும் கூட. உங்கள் முன்னோர்களின் தொடர்ச்சியாக நீங்கள் இருப்பதால், உங்கள் முந்தைய பிறப்புகள் உங்கள் முன்னோர்கள். எனவே, அவர்களின் செயல்களும் உங்கள் துன்பங்களுக்கு காரணங்களாகும்.

இது ஒரு அனுமானமும் கூட. ஏனெனில், வாழ்க்கையில் சில சிக்கல்களுக்கான காரணங்களை மனிதனால் கண்டுபிடிக்க முடியாதபோது, ​​முந்தைய வாழ்க்கையின் செயல்களே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறான். மறுபிறப்பு கருத்து இப்படித்தான் வந்துள்ளது.


எப்படியிருந்தாலும், நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால், உங்கள் துன்பங்களை குறைக்க முடியும்.உங்களுடைய துன்பங்களுக்கு காரணம் நீங்கள் தான் என்பதை நீங்கள் புரிந்துக்கொண்டால், முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் கர்மாவை நீங்கள் மீண்டும் திருத்தி எழுத முடியும். நீங்கள்தான் உங்கள் கர்மாவின் எழுத்தாளர். நீங்கள் உங்கள் முன்னோர்களின் தொடர்ச்சி. எனவே, உங்கள் கர்மாவையோ அல்லது மூதாதையர்களையோ குறை சொல்ல வேண்டாம். அவற்றிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்.


காலை வணக்கம் ... உங்கள் கர்மாவை திருத்தி எழுதுங்கள் ..💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்


88 views0 comments

Recent Posts

See All

உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும்...

கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப்...

சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே...

Comentarios


bottom of page