26.5.2015
கேள்வி: ஐயா, கனவுகளை எவ்வாறு நிறுத்துவது?
பதில்: நீங்கள் எதையாவது நிறுத்த விரும்பினால், முதலில் அதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கனவுகள் தூக்கத்தின் போது வரும் எண்ணங்களைத் தவிர வேறில்லை. உங்கள் இரவு உங்கள் பகலின் பிரதிபலிப்பாகும். உங்கள் பகல் மகிழ்ச்சியுடன் கழித்திருந்தால், இனிமையான கனவுகள் வரும். உங்கள் பகலை நீங்கள் கொடூரமாக கழித்திருந்தால், பயங்கரமான கனவுகள் வரும். நீங்கள் எதையாவது அடக்கியிருந்தால், அது கனவுகளில் வெளியே வரும்.
நீங்கள் எதையாவது வலுவாக விரும்புகிறீர்கள். ஆனால் நடைமுறையில் அதை அடைய முடியாது. பின்னர் அந்த ஆசை ஒரு கனவின் மூலம் நிறைவேறும். ஒரு பிரச்சினைக்கான தீர்வை நீங்கள் ஆழமாக சிந்திக்கிறீர்கள் என்றால், அதற்கான தீர்வு ஒரு கனவாக வரும். உங்கள் எண்ணங்களை நெறிப்படுத்துவதன் மூலம், உங்கள் கனவுகளை குறைக்க முடியும். விழிப்புணர்வு அதிகரித்தால், கனவுகள் குறையும். நீங்கள் முற்றிலும் விழிப்புணர்வுடன் இருந்தால், எந்த கனவுகளும் இருக்காது.
காலை வணக்கம் ... கனவில்லாமல் இருங்கள்..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments