30.5.2015
கேள்வி: ஐயா, எல்லாம் நன்மைக்கே என்றால், நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?
பதில்: அந்த சொற்றொடருக்கு நீங்கள் முயற்சி செய்யக்கூடாது என்று அர்த்தமல்ல. முயற்சி செய்யாமல் அமைதியாக இருக்க முடியாது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த பலன் வரவில்லை என்றால், நீங்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது.
நீங்கள் எதிர்பார்த்தது இப்போதே வந்தால், அதை நீங்கள் கையாள முடியாமல் போகலாம். எனவே முடிவு ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம். உங்கள் முயற்சியை நீங்கள் தொடர வேண்டும். இப்போது என்ன முடிவு வந்துள்ளதோ அது நன்மைக்கே . இது உங்கள் இலக்கை அடைய உதவும் சில மதிப்புமிக்க பாடங்களை உங்களுக்குக் கற்பிக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது உங்கள் முக்கிய இலக்கை அடைய உங்களை தயார்படுத்துகிறது என்று அர்த்தம். இது உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பது இப்போது உங்களுக்குத் தெரியாது. ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அதனால்தான் எல்லாம் நன்மைக்கே என்று கூறியுள்ளனர்.
எல்லாம் நன்மைக்கே என்பதன் பொருள் முயற்சியை மேற்கொள் மற்றும் முடிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்பதாகும். ஏனெனில் அது உங்கள் கையில் இல்லை. சரியான முடிவு சரியான நேரத்தில் தவறாமல் வரும்.
காலை வணக்கம் ... முயற்சி செய்யுங்கள் ...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comentarios