8.5.2016
கேள்வி: என்னில் எழும் எண்ணங்கள் உள்ளுணர்வா(intuition) அல்லது சில தேவையற்ற எண்ணங்களா என்பதை அறிவது சில நேரங்களில் கடினமாக இருக்கிறது. அதை எப்படி அறிந்து கொள்வது ஐயா?
பதில்: உள்ளுணர்வு என்பது உள்ளிருந்து வரும் வழிகாட்டுதல் ஆகும். இந்த வழிகாட்டுதல் நடு மனதிலிருந்தும் (sub-conscious mind), அடி மனதிலிருந்தும்(Super conscious mind ) வருகிறது. உங்கள் புற மனம்(conscious mind) உங்கள் நடு மனது மற்றும் அடி மனதுடன் பொருந்தவில்லை என்றால் உள்ளுணர்வை அடையாளம் காண்பது கடினம். பொதுவாக, நீங்கள் ஏதாவது செய்ய விரும்பும்போதும் , செய்ய விரும்பாதபோது உள்ளுணர்வு வரும்.
நீங்கள் ஏதாவது செய்ய விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது நடக்காது என்று உங்கள் நடு மனதிற்கு தெரியும். எனவே, அதைச் செய்ய வேண்டாம் என்று அது உங்களுக்குச் சொல்கிறது. அது உள்ளுணர்வு. ஆனால் நீங்கள் நேர்நிறையாக(positive) இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே, உங்கள் உள்ளுணர்வைப் புறக்கணிப்பீர்கள், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்வீர்கள். ஆனால் நீங்கள் தோல்வியடைவீர்கள்.
நீங்கள் ஏதாவது செய்ய விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம். இப்போது முயற்சி செய்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பது உங்கள் நடு மனதிற்கு தெரியும். எனவே, அது உங்களை முயற்சிக்கச் சொல்கிறது. அது உள்ளுணர்வு. ஆனால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏமாற்றமடையக்கூடாது என்று நினைப்பீர்கள். எனவே, உங்கள் உள்ளுணர்வை புறக்கணிப்பீர்கள், முயற்சிகள் செய்ய மாட்டீர்கள். பின்னர், நீங்கள் முயற்சித்திருந்தால், வெற்றி பெற்றிருப்பீர்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது, உங்கள் மனம் வருத்தப்படும்.
நீங்கள் எதிர்பார்க்காதபோதுதான் கிட்டத்தட்ட உள்ளுணர்வு வருகிறது. நீங்கள் அதை எதிர்பார்த்தீர்களானால், அப்பொழுது உங்கள் எண்ணமே பிரதிபலிக்கும். அன்றாட வாழ்க்கையில், ஒரு எண்ணம் உங்கள் விருப்பத்திற்கு எதிராக மீண்டும் மீண்டும் பிரதிபலித்தால், அந்த எண்ணத்தை உள்ளுணர்வாக உணர்ந்து அதற்கேற்ப செயல்படுங்கள். இது பல முறை உண்மையாக இருந்தால், உங்கள் நடு மனம் மற்றும் அடி மனதுடன் நீங்கள் இணக்கமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
காலை வணக்கம்... உங்கள் நடு மனதுடனும், அடி மனதுடனும் இணக்கமாக இருங்கள் ..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments