10.7.2015
கேள்வி: ஐயா, காயத்தை வெளிப்படுத்துங்கள் அது குணமாகும் என்று நீங்கள் அன்றொருநாள் சொன்னீர்கள். உளவியல் காயங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது?
பதில்: நீங்கள் மதிப்பீடு செய்யாத போது, உங்கள் மனம் ஒன்றாக இருக்கும். உங்கள் எண்ணங்கள், ஆசைகள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை நல்லது மற்றும் கெட்டது என்று நீங்கள் தீர்மானிக்கும்போது, உங்கள் மனம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.நீங்கள் நல்லதை அனுமதித்து கெட்டதை அடக்குகிறீர்கள். அடக்கப்பட்டவை மனதின் விழிப்புணர்வற்ற பகுதிக்குச் செல்கின்றன. அது காயமடைகிறது. எனவே, அடக்க வேண்டாம். எதையும் கண்டிக்க வேண்டாம். நீங்கள் கண்டனம் செய்தால், அது உங்கள் மனதின் இருண்ட பக்கத்தில் மறைகிறது.
உள்ளே என்ன இருக்கிறதோ அதுதான் வெளியே வருகிறது. நீங்கள் அதை அனுமதிக்கவில்லை என்றால், அது எங்கே போகும்?
அது மீண்டும் உள்ளே சென்று வெளியே வருவதற்கான மற்றொரு வாய்ப்பு வரும் வரை காத்திருக்கும். நீங்கள் தொடர்ந்து அடக்கினால், அது காயமாகிவிடும். நீங்கள் கெட்டதைப் பார்த்து பயப்படுகிறீர்கள். அதனால்தான் நீங்கள் அதை அடக்குகிறீர்கள். நல்லது கேட்டது என்று மதிப்பீடு செய்யாமல், எல்லாவற்றையும் வெளியே விடுங்கள். ஆனால் நீங்கள் தவறாமல் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். அந்த கவனிப்புதான் மருந்து. இது காயத்தை குணப்படுத்தும். மதிப்பீடு செய்யாமல் நீங்கள் கவனிக்கும்போது, உங்கள் மனதில் பிளவுகள் மறைந்துவிடும். கவனிப்பு பிளவுகளை ஒன்றிணைக்கிறது.
காலை வணக்கம் .... பகுக்க முடியாததாக இருங்கள்...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Commentaires