21.4.2016
கேள்வி: ஐயா, மனதில் தெளிவு, ஆற்றல் நிலை மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நான் நாளுக்கு நாள் இளமையாகி வருவதாக உணர்கிறேன் ... ஆனால் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது என் உடல் தோற்றத்தில் ஒரு மாற்றம் இருக்கிறது, எனக்கு வயதாகிறது , இதற்கு என்ன பொருள்?
பதில்: புதிய விஷயங்களைப் பற்றி அறிய / கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும் வரை, நீங்கள் இளமையாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்கள் உடலுக்குக் கூட விரைவில் வயதாகாது. ஆனால், தெரிந்து கொள்ள / கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள் என்பது அதன் பொருள், அதாவது அறிவு முதிர்ச்சி. அப்பொழுது விரைவில் உங்கள் தலைமுடி நரைக்கக்கூடும். உங்கள் செயல்பாடுகள் முதிர்ச்சியடையும். நீங்கள் அறிவு நிலையை அடைந்தால், நீங்கள் இளமையாகவோ அல்லது வயதானவராகவோ உணர மாட்டீர்கள், பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய யோசனை உங்களுக்கு இருக்காது.
ஆனால் நீங்கள் ஒரு குழந்தையைப் போலவும், நிலைமைக்கு ஏற்ப முதிர்ச்சியடைந்தவனாகவும் பதிலளிப்பீர்கள். நீங்கள் என்றென்றும் இருப்பீர்கள். எதுவாக இருந்தாலும், உடலுக்கு வயதாகிவிடும். எனவே, கண்ணாடியில் உங்கள் படத்தைப் பார்க்கும்போது, உங்கள் உடல் வயதாகி வருவதைக் காண்பீர்கள்.
காலை வணக்கம் ... இளமை மற்றும் முதுமையை கடந்து வாழ்க ..💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments