top of page

ஆஸ்துமாவுக்கு ஒரு நிரந்தர தீர்வு

25.4.2016

கேள்வி: ஐயா, ஆஸ்துமாவை குணப்படுத்தும் உறுதிப்படுத்தப்பட்ட நிரந்தர தீர்வு ஏதேனும் உள்ளதா..?


பதில்: ஆஸ்துமா என்பது காற்றுப்பாதையின் அழற்சி நோயாகும். இது முக்கியமாக ஒவ்வாமைகளிலிருந்து வருகிறது. மீண்டும் மீண்டும் சுவாசப் பிரச்சினைகள், மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம், இருமல் போன்றவை ஆஸ்துமாவின் சில பொதுவான பண்புகள் அல்லது அறிகுறிகள் ஆகும். இயற்கையிலிருந்து ஏற்படும் ஒவ்வாமைகள் ஆஸ்துமாவிற்கு சில பொதுவான காரணங்கள் ஆகும். உதாரணத்திற்கு, வீட்டிலிருந்து தூசிப் பூச்சி மற்றும் கரப்பான் பூச்சி, புல், மகரந்தம், உணவுகள், காலநிலை மாற்றங்கள் , பூனைகள், நாய்கள் போன்ற விலங்குகள்.


ஆஸ்துமா நோய்க்கான காரணங்களை ஆயுர்வேதம் மூன்றாக வகைப்படுத்துகிறது - உணவு தொடர்பான காரணிகள், வேலை தொடர்பான காரணிகள் மற்றும் பிற காரணிகள். நாம் ஆன்மீக ரீதியில் பகுப்பாய்வு செய்தால், ஆஸ்துமாவுக்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும். ஒன்று பரம்பரை, மற்றொன்று தற்போதைய வாழ்க்கை முறை. உணர்திறனில்(Sensitivity) ஏற்படும் சில சிக்கல்கள் ஒவ்வாமைக்கு காரணம். உணர்திறன் மனதுடன் தொடர்புடையது. மனம் பரம்பரை பதிவுகளால் (Heriditory imprints) பாதிக்கப்படுகிறது.


எனவே, உங்கள் பரம்பரை பதிவுகளை மாற்ற முடிந்தால், நீங்கள் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம். காரிய சித்தி யோகத்தின் தியான முறைகள் உங்கள் மரபணுக்களை மாற்றும். பொருத்தமான உடற்பயிற்சிகள், ஆசனங்கள், பிராணயாமாக்கள், முத்ராக்கள் மற்றும் கிரியாக்கள் உங்கள் உடலை சுத்தப்படுத்தி உறுப்புகளை உற்சாகப்படுத்தும். ஆனால் ஒரு நிரந்தர தீர்வு உங்கள் வாழ்க்கை முறையைப் பொறுத்து அமையும். ஆஸ்துமாவை ஏற்படுத்தாத வகையில் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றினால், ஆஸ்துமா இல்லாத வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும்.


காலை வணக்கம் ... உங்கள் தியானம் உங்கள் மரபணுக்களை மாற்றட்டும் ...💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்


Recent Posts

See All
உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும்...

 
 
 
கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப்...

 
 
 
சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே...

 
 
 

Comments


bottom of page