ஆன்மீகம் மற்றும் உலகிற்கு சேவை
5.4.2016
கேள்வி: ஐயா, இந்த நாட்களில் நடக்கும் பல கொடூரமான சம்பவங்கள் மனிதனில் அதிகரித்துள்ள அறியாமையைப் பற்றி நமக்குத் தெரியப்படுத்துகிறது ... அவர்களை ஆன்மீகத்திற்குள் கொண்டு வருவதைத் தவிர்த்து, நம்முடைய உலகத்தை மேம்படுத்துவதற்காக நம் சேவைகளை வேறு எவ்வாறு தொடர வேண்டும்?
பதில்: அவர்களை ஆன்மீகத்திற்குள் கொண்டுவராமல், நீங்கள் சிறந்த உலகை உருவாக்க முடியாது. சிறந்த உலகில் எல்லோரும் ஆன்மீகத்தை கடைப்பிடிப்பார்கள். உண்மையில், நீங்கள் எதைச் செய்தாலும் அது அவர்களை ஆன்மீகத்திற்கு கொண்டு வருவதற்க்கே ஆகும். இல்லையெனில், நீங்கள் நேர்நிறையான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அவர்களில் உள்ள கொடூரத்தை குறைப்பதற்கும் அமைதியான வாழ்க்கையை நடத்துவதற்கும் நீங்கள் அவர்களை அல்லது உலகத்தை வாழ்த்தலாம். குழு தியானம் உலகெங்கிலும் பல இடங்களில் செய்யலாம். இதனால் நேர்நிறையான அதிர்வுகள் (positive vibrations) எல்லா இடங்களிலும் பரவுகின்றன.
இயற்கையின் செயல் விளைவு விதி (Cause and effect system) குறித்த விழிப்புணர்வை உருவாக்கலாம். இதனால் குற்ற விகிதம் குறையும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை நடத்துவதன் மூலம் நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க முடியும். ஒரு நபர் ஞானமடைந்தால், அவரது காந்தப்புலம் (Magnetic field) உலகில் பலரில் மாற்றத்தை ஏற்படுத்தும். உலகெங்கிலும் ஞானமடைந்தவர்கள் அதிகம் இருந்தால், அறியாமை வேகமாக குறையும். எனவே, நீங்கள் ஞானமடைய முயற்சி செய்வது உலகிற்குச் செய்யும் மிகச் சிறந்த சேவையாக இருக்கும்.
காலை வணக்கம் .. ஞானமடைந்து ஞானத்தைப் பரப்புங்கள் ...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்