top of page

ஆன்மீகத்திலிருந்து உலக அமைதி

23.4.2016

கேள்வி: ஐயா, இன்னும் 50 ஆண்டுகளில் உலக அமைதி வரும் என்று மகரிஷி கூறியிருக்கிறார். உலகில் உள்ள அனைவருக்கும் ஞானம் கிடைக்கும் வரை தனக்கு முக்தி தேவையில்லை என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட மிகச்சிறந்த ஆளுமைகளின் விருப்பம் உலக அமைதியாக இருந்தாலும், அது தாமதிக்கப்படுகிறது. அதற்கு காரணம் என்ன? இன்னும் என்ன தேவைப்படுகிறது.? இது எப்போது நிகழும் ? நான் எப்பொழுது ஞானம் அடைவேன்?


பதில்: உலக அமைதி வரவேண்டும் என்பது உலக நலனுக்காக செய்யப்படும் நல்ல சங்கல்பம் ஆகும். உலக அமைதிக்கான கால அளவை யாரும் இதுவரை நிர்ணயிக்கவில்லை. நேர வரம்பை நிர்ணயித்த முதல் நபர் வேதாத்திரி மகரிஷி ஆவார். உலக அமைதியை அடைய இரண்டு சாத்தியங்கள் உள்ளன.

1. எல்லோரும் ஞானமடைதல்

2. ஓருலக அரசாங்கத்தை உருவாக்குதல்.


கடந்த இருபது ஆண்டுகளைப் பார்த்தால், இதற்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு விஞ்ஞானம் மிக விரைவாக வளர்ந்துள்ளது. அடுத்த முப்பது ஆண்டுகளில், இந்த வளர்ச்சி உச்சத்தை எட்டக்கூடும். அப்பொழுது மக்கள் பொருள் விஷயங்களில் சலிப்படைந்தோ / திருப்தி அடைந்தொ இருப்பார்கள். எனவே, அவர்கள் உள்நோக்கித் திரும்பக்கூடும். விஞ்ஞானத்தின் மூலம் மக்கள் தெய்வீக நிலையை புரிந்து கொள்ளலாம், இதனால் அவர்கள் மாயைகளிலிருந்து விடுப்பட்டு ஞானமடைய முடியும். அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீக அறிவு இருக்கும். எனவே, அவர்கள் ஊருலக ஆட்சி அமைக்க ஒப்புக் கொள்ளக்கூடும். உலகம் முழுவதற்கும் ஒரே அரசாங்கம் உருவாக்கப்பட்டால், போருக்கான தேவையே இருக்காது. மேலும், அரசாங்க சட்டத்தின் மூலம், ஆன்மீகம் எல்லா மக்களையும் சென்றடையக்கூடும்.


சுவாமி விவேகானந்தர் உலகத்தின் மீதுள்ள கருணையினால் அவ்வாறு கூறியுள்ளார். அவர் மக்கள் ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுக்க ஊக்குவித்துக்கொண்டே இருப்பார். உலக அமைதிக்காக பலர் வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நபரும் ஆன்மீக வாழ்க்கையை நடத்தினால், உலக அமைதி விரைவில் நிகழும். ஞானமடைதலைப் பொருத்தவரை, நீங்கள் ஞானம் அடைவதற்கு முன்னுரிமை அளித்தால், ஞானம் அடைவீர்கள். இது தாமதமாகிக் கொண்டிருந்தால் , உங்கள் முன்னுரிமை ஞானமடைதல் அல்ல என்று அர்த்தம். எல்லோருடைய முன்னுரிமையும் ஞானமடைதலாக இல்லாவிட்டால், பரவாயில்லை. ஆனால், எல்லோரும் ஆன்மீக பாதையில் இருந்தால், அது உலக அமைதிக்கு வழிவகுக்கும்.

காலை வணக்கம் ... ஆன்மீகப் பாதையில் பயணியுங்கள்..💐


வெங்கடேஷ் - பெங்களூர்

(9342209728)


வெற்றி உண்டாகட்டும்

47 views0 comments

Recent Posts

See All

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிமுறை என்ன மற்

bottom of page