23.7.2015
கேள்வி: ஐயா. சில நேரங்களில், நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது, கண்ணீர் (ஆனந்தக் கண்ணீர்) வருகிறது. ஏன் அப்படி? அதைத் தவிர்ப்பது எப்படி?
பதில்: நீங்கள் அதிக வலியை உணரும்போது, கண்ணீர் வரும். ஏன்? வலி தாங்க முடியாததால். அதை நீங்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எனவே, அதிகப்படியான வலியை வெளியிட, கண்ணீர் வருகிறது. அதேபோல், நீங்கள் அதிக மகிழ்ச்சியை உணரும்போதும், கண்ணீர் வரும்.
உங்கள் மகிழ்ச்சியை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்த முடியாதபோது, நீங்கள் கண்ணீர் மூலம் வெளிப்படுத்துகிறீர்கள். எது அதிகமாகிவிட்டாலும், நம் உடல் அதை வெளியேற்றும் என்பது நமது உடலின் வழிமுறை. தாங்க முடியாததை அதிகம் என்கிறோம். அழுத்தத்தை சமாளிப்பதில் எல்லோரும் வேறுபடுகிறார்கள்.
எண்ணங்கள் அதிகமாகிவிட்டால், அதன் அழுத்தம் கனவுகளாக வெளியிடப்படுகிறது. உணர்ச்சிகள் அதிகமாகிவிட்டால், அதன் அழுத்தம் கண்ணீராக வெளியிடப்படுகிறது. உணர்ச்சிகள் அதிகமாக இருப்பது உங்களில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும். வலி ஒரு எதிர்மறை உணர்ச்சி. மற்றும் இன்பம் ஒரு நேர்நிறையான உணர்ச்சி.
நேர்நிறை ஒரு பக்கம் மற்றும் எதிர்மறை மறுபக்கம். நீங்கள் நேர்நிறை பக்கத்தில் அல்லது எதிர்மறை பக்கத்தில் இருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு விளிம்பை நோக்கிச் செல்கிறீர்களோ, அந்த அளவுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். மேலும் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும்.
நீங்கள் எவ்வளவு மையத்தை நோக்கிச் செல்கிறீர்களோ, அவ்வளவு குறைவாக அழுத்தம் இருக்கும். நீங்கள் நடுவில் இருக்கும்போது, அழுத்தம் சீராகி நேர்நிறை மற்றும் எதிர்மறை நடுநிலையாகிறது.
காலை வணக்கம்.... நடுவில் இருங்கள்...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Comments