top of page

அமைதியான வாழ்க்கைக்கான சூத்திரம்

15.4.2016 கேள்வி: ஐயா.. என் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளுக்கும் அமைதியாக வாழ ஒரு குறிப்பிட்ட சூத்திரம் உள்ளதா? பதில்: வாழ்க்கையின் எல்லா சூழ்நிலையிலும் சமநிலையில் இருப்பதே அமைதிக்கான சூத்திரம். வாழ்க்கை பெரும்பாலும் ஏற்றத் தாழ்வுகள், இன்பத் துன்பம் , அன்பு பிரிப்பு, வெற்றி தோல்வி நிறைந்தது. ஆனால் இவை எதுவும் நிரந்தரமானவை அல்ல, எல்லாமே காலப்போக்கில் கடந்து போகும். சிறிது காலம் மேலே செல்லும் ஒருவர், சிறிது காலம் கீழே செல்வவர். வாழ்க்கையின் இந்த இடைநிலை தன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். நாம் வாழ்க்கையின் ​​நேர்நிறையான சூழ்நிலையில் இருக்கும்பொழுது அதிகமாக சந்தோசப்படாமலும், எதிர்மறையான சூழ்நிலையில் இருக்கும்பொழுது மிகவும் மனச்சோர்வடைந்துவிடாமலும் இருக்க வேண்டும்.. அந்த மனநிலைதான் சமச்சீரான மனம். ஒருவர் மகிச்சியான சூழ்நிலையை சமநிலையான மனதுடன் கையாள முடிந்தால், அவரால் வலிமிகுந்த சூழ்நிலைகளை எளிதில் கையாள முடியும். இந்த நிலைகளில் நாம் கரைந்து போகாவிட்டால், இருமையிலிருந்து விடுபட்டு நம்முடைய உண்மையான சுய நிலையை அடைகிறோம். விடுதலை அடைந்த நபர் எப்போதும் அமைதியாக இருப்பார். மனதில் சம நிலையை அடையவும், தன் சுயநிலையை உணரவும், விழிப்புனைவு அவசியம். விழிப்புணர்வை அடைய, நாம் தவறாமல் தியானிக்க வேண்டும். தியானம் மன அதிர்வெண்ணைக் குறைக்கிறது, இது சூழ்நிலையை தெளிவாகக் காண உதவுகிறது. இந்த நிலையில், ஒருவர் நேர்நிறையான அல்லது எதிர்மறையன சூழ்நிலையில் அதிக மகிழ்ச்சி அடையாமலும் அதிக துக்கப்படாமலும் சூழ்நிலையை தெளிவாக பார்க்க முடியும். தெளிவான ஒருவர் மட்டுமே அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். காலை வணக்கம்… இருமையிலிருந்து விடுபடுங்கள் ...💐 வெங்கடேஷ் - பெங்களூர்     (9342209728)


வெற்றி உண்டாகட்டும்

167 views0 comments

Recent Posts

See All

உறவுகளில் சிக்கல்கள்

12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும்...

கிருஷ்ணர் இறந்துவிட்டாரா?

11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப்...

சித்திகளின் வழிமுறை

10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே...

Comments


bottom of page