21.5.2015
கேள்வி: ஐயா, அன்பின் வலியை எவ்வாறு சமாளிப்பது?
பதில்: நீங்கள் ஒருவரில் வேரூன்றும்போது, மிகுந்த மகிழ்ச்சி அடைகிறீர்கள். நீங்கள் உலகின் உச்சியில் இருப்பதாக உணர்கிறீர்கள். நீங்கள் அவரிலிருந்து பிடுங்கப்படும்போது, உங்கள் வாழ்க்கை முடிந்து விட்டதைப் போல மிகுந்த வேதனை அடைகிறீர்கள். சிறிது காலம் கழித்து நீங்கள் மீண்டும் ஒருவரில் வேரூன்றி விடுவீர்கள். நீங்கள் மீண்டும் பிடுங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது மீண்டும் மீண்டும் தொடரும்.
நீங்கள் மகிழ்ச்சியையும் வேதனையையும் முற்றிலும் அனுபவித்தால், இரண்டையும் தாண்டி செல்கிறீர்கள். பின்னர் விழிப்புணர்வு எனப்படும் மற்றொரு பரிமாணம் திறக்கப்படுகிறது. விழிப்புணர்வு இருக்கும்போது, நீங்கள் உங்களிலேயே வேரூன்றத் தொடங்குகிறீர்கள். இது உங்கள் வாழ்க்கையின் மிக உயர்ந்த திருப்புமுனையாகும். நீங்கள் எவ்வளவு அதிகமாக விழிப்புணர்வோடு இருக்கிறீர்களோ, அவ்வளவு ஆழமாக உங்கள் மூலத்தில் வேரூன்றி விடுகிறீர்கள். இப்போது உங்களை யாரும் பிடுங்க ஏறிய முடியாது. இப்போது கூட அன்பு இருக்கிறது, ஆனால் விழிப்புணர்வுடன் இருக்கிறது.
அன்பு + விழிப்புணர்வு = கருணை.
இப்போது நீங்கள் மற்றவரில் வேரூன்றாமல் அன்பைப் பரப்புவீர்கள். எனவே எந்த ஏமாற்றமும் இருக்காது. பிடுங்கப்படுவதோ அல்லது ஏமாற்றப்படுவதோ இருக்காது. ஒருவர் ஏமாற்றுக்காரர் என்பதை இப்போது நீங்கள் தெளிவாக அறிவீர்கள். ஆனாலும், நீங்கள் அந்த நபர் மீது அன்பைப் பொழிவீர்கள். கருணை என்பது நிபந்தனையற்ற அன்பு.
காலை வணக்கம் .. உங்களிலேயே வேரூன்றி இருங்கள் ....💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்
Kommentare