அதிசயம்
2.6.2015
கேள்வி: ஐயா, அதிசயம் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில்: ஏதோ நடக்கிறது. அது எப்படி நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இது உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டது. நீங்கள் அதை ஒரு அதிசயம் என்று அழைக்கிறீர்கள். அது எவ்வாறு நடக்கிறது என்பதற்கான வழிமுறை உங்களுக்குத் தெரியும் வரை இது ஒரு அதிசயமாக இருக்கும். அது எவ்வாறு நிகழ்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டவுடன், அது உங்களுக்கு ஒரு அதிசயமாக இருக்காது.
தங்களுக்குத் தெரியாது என்று தெரியாத அறிவற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு அதிசயம் நிகழும் என்று காத்திருக்கிறார்கள். தங்களுக்கு கொஞ்சம் தெரியும் என்று தெரிந்த அறிவுஜீவிகள், ஒரு அதிசயம் எப்படி நிகழ்கிறது என்பதற்கான காரணத்தைத் தேடுகிறார்கள். தங்களுக்குத் தெரியாது என்று அறிந்த புத்திசாலித்தனமான மக்கள், பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்தும் ஒரு அதிசயம் என்பதை அறிவார்கள். தன்னை உணர்ந்த ஒருவர் மற்றவர்களுக்கு ஒரு அதிசயமாகத் திகழ்வார்.
முட்டாள்கள் அதிசயங்களை எதிர்பார்கிறார்கள். புத்திசாலி ஒரு அதிசயமாகத் திகழ்கிறார்.
காலை வணக்கம் .... நீங்களே அதிசயமாக இருங்கள்...💐
வெங்கடேஷ் - பெங்களூர்
(9342209728)
வெற்றி உண்டாகட்டும்